Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஒலிம்பிக்

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளும் : முன்னுதாரணமான 5 கதைகளும்

  • May 26, 2020
  • 371 views
Total
1
Shares
1
0
0

ஒலிம்பிக் போட்டிகள் உலகத்தில் அதிக சிறப்பு வாய்ந்த அங்கீகாரமிக்க போட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டிகளை நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடாத்துகிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் அந்தந்த போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் எனும் ஒழுங்கில் பரிசில்கள் அளிக்கப்படும். இவை எல்லாம் நமக்குத் தெரிந்த விடயம் தான். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உழைப்பும், தியாகமும் நம்மை புல்லரிக்கச் செய்யும்

சுவாரசியாமான, முன்னுதாரணமான ஒலிம்பிக் வராலாற்று தகவல்கள்

DEREK REDMOND: வேதனையை முறியடித்து உங்களை நீங்களே உயர்த்துதல்

1992, பார்சிலோனாவில் ஒலிம்பிக் 400 m அரையிறுதிச் சுற்று ஆரம்பமாக சில நிமிடங்களே உள்ளன. DEREK REDMOND ஆரம்பக் கோட்டில் தனது கனவுகளோடு போட்டியை வெல்லும் உறுதியில் நிற்கின்றார். அவர் அவ்வாறு உணர தலைப்பட்டிருந்தார்.

ஒரு உண்மையான வெற்றியாளனாக இருக்க நீங்கள் உடலளவில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் அதை விட மன உறுதி முக்கியம் – DEREK REDMOND

ஏழு வருடங்கள் முன்பு அவர் 1985 இல் பிரித்தானிய 400 m சாதனையை முறையடித்து இருந்தார். 1986  இல் ஏற்கனவே வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அவர் ஐரோப்பிய வெற்றிக்கிண்ணம் மற்றும் பொதுநலவாய போட்டிகள் இரண்டிலும் 4 X 400 m போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

ஆனால் எதுவுமே சாதாரணமாக கிடைப்பதில்லையே. அவருடைய துறை பல தடவைகள் காயத்தால் தடைப்பட்டது. 1992 போட்டிகளுக்கு முன் அவர் 8 முறை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். அவரது மனதிடமும், விடாமுயற்சியும் அவரை மீண்டும் அழைத்து வந்திருந்தன.

அவர் தற்பொழுது அவரது வெற்றிப் பயணத்தை தொடங்க காத்திருக்கிறார். போட்டி தொடங்க உச்ச வேகத்தில் ஓடுகிறார். திடீரென அவரது பின் தொடை தசை நார் கிழிந்து விடுகிறது. வலி தாங்க முடியாமல் நிலத்தில் விழுகிறார். ஆனால், சில நொடிக்குப் பின் எதிர்பாராதது நடக்கிறது. அவர் எழுந்து தத்தி தத்தி ஓட ஆரம்பித்ததும் அவரது தந்தை வந்து தோள் கொடுத்து அவர் போட்டியை முடிக்க உதவி செய்கிறார். நொண்டியபடியே, உச்ச வேதனையிலும் போட்டியை முடித்து மனிதனுடைய விடா முயற்சியை பறை சாற்றினார்.

அந்தக் காயம் எதிர்பார்த்ததை விட மோசமாகி விட்டிருத்து. இரண்டு ஆண்டு காலத்தில் ஏழு இடையீடுகளுக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் அவர் அதன் பின் இங்கிலாந்துக்காக கூடைப்பந்து விளையாடினார்.

WILMA RUDOLPH: இயலாமையிலிருந்து ஒலிம்பிக் புகழுக்கு

இயலாது என்று எதுவுமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இவர்.

21 பேர் உள்ள குடும்பத்தில் குறை மாத குழந்தையாக பிறந்து, எந்த வளங்களும் இல்லாத நிலையில், விளையாட்டுத் துறையை தாக்குப்பிடிக்க முடியாமல், அதிலும் எந்த மருத்துவ தீர்வுகளும் அற்ற 1950களில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு மிக மோசமான சிக்கல்களை எதிர்கொண்டவர்.

ஆனால் சமூக தடைகளோ, போலியோவோ எதுவுமே அவருக்குள் எரிந்த தீயை அணைக்க முடியவில்லை.

கஷ்டப்படமால் வெற்றி அடைய முடியாது – WILMA RUDOLPH

12 வயதாகும்போது போலியோவைக் கடந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார். அவருடைய வைத்தியருக்கு ஆச்சரியமளிக்குமாறு அவர் விளையாட்டுத் துறைக்குள் புகுந்து, எட்டு வருடங்கள் முடியும் போது, ஒலிம்பிக் வெற்றியாளராகவும் ஆகியிருந்தார்.

அவர் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு 3 தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரி ஆகியிருந்தார்.

2 வருடங்களுக்கு பிறகு வசதியற்ற சிறுவர்களுக்கு உதவ முடிவெடுத்து, அதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

KERRI STRUG: வலியை தோற்கடிக்க தேவையான உண்மையான சக்தி

1996 வரை அமெரிக்க பெண்கள் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் வென்றதில்லை. ஆகவே, ஊடங்களால் “The Magnificent Seven” என அழைக்கப்பட்ட KERRI STRUG மற்றும் குழுவினருக்கு மேல் எக்கச்சக்க எதிர்பார்ப்ப்புகளும், அழுத்தமும் இருந்தது.

அந்த போட்டியில் நடந்த சில விடயங்கள் இதயத்தை ஸ்தம்பிக்க செய்தன. உலகத்தின் சகல செய்தித்தாள்களையும் ஆக்கிரமித்து இடம்பிடித்து அமெரிக்காகாக தங்கம் வென்ற நொடி உலகத்தின் வேறெந்த இடத்திலும் காணாத மனித திறமை அது.

உடைந்த கணுக்காலுடன் யாராலாவது இரண்டு முறை பாய்ந்து சுழன்று தரையிறங்க முடியுமா ? அதனைத்தான் செய்து காட்டினார் KERRI STRUG. குதித்து தரையிறங்கிய பின்பு வெற்றிகரமாக ஒரு நொடி நின்று தங்கத்தை உறுதி செய்து விட்டு. கீழே அமர்ந்தவரை கையில்தான் தூக்கிக் கொண்டு போனார்கள்.  

ஆனால் இன்றுவரை அவரை உலகம் கையில் தாங்கிப் போற்றுகிறது.

BILLY MILLS : பின் தங்கியவர்

1964 டோக்கியோ ஒலிம்பிக்கின் போது யாருக்குமே அவரைத் தெரியாது. அவரது பெயர் 10,000m ஓட்டத்தில் மற்றும் இடம்பெற்று இருந்தது. ஆனால் அவர் யாருடையதும் விருப்பமோ, எழுச்சி நட்சத்திரமோ அல்ல.

அவருக்கே கூட சில மணித்தியாலங்களில் நமது பெயர் புகழ் பெறப் போகிறதெனத் தெரியாது.

பாதி அமெரிக்கராகவும் , பாதி வெள்ளைகாரராகவும் பிறந்த அவர் தென் டகோடாவில் ஒரு காப்பகத்தில் வளர்ந்தார்.  12 வயதில் அவர் ஒரு அநாதையாக, வாழவே கஷ்ப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் வளர்ந்த சமூக சூழல் உதவிகரமாக இல்லை. அந்தக் காலத்தில் பூர்விக அமெரிக்கர்கள் வாழ்வு நன்றாக இருக்கவில்லை. அவர்கள் காப்பகங்களில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். ஓடுவது ஒன்றே தனக்கு சுதந்திரமென நம்பினார்.

“ நான் முதலாவது ஒலிம்பிக் புத்தகத்தை வாசித்தபோது, அதில் ஒலிம்பியர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுவதாக போடப்பட்டிருந்தது. நான் அப்போதுதான் சிந்தித்தேன், நானும் அவ்வாறன ஒருவரானால், சுவர்க்கம் சென்று எனது பெற்றோரை பார்க்கலாம் என நினைத்தேன்.” என்று தனது சிறு வயது நியாபகங்களை பகிர்கிறார்.

அவர் தனது திறமையை நிரூபித்து விளையாட்டு பல்கலைகழகத்தில் புலமைப்பரிசிலும் பெற்றார். பின்னர் அங்கிருந்து இராணுவத்துக்காக பணியாற்றும்போது ஒலிம்பிக் வாய்ப்பும் கிடைத்தது.

கடைசி காலத்தில் நல்ல பயிற்சியும், உதவிகரமான மனைவியும் அமைய தன்னுடைய வாழ்வின் உச்சத்தில் இருந்தார். ஆனால் கடைசி நிமிடம் வரை அவரை யாருக்கும் தெரியாது.

கடைசி நிமிடத்தில் மூச்சிறைக்கும் வேளையிலும் அதிகூடிய வேகத்தில் ஓடி தனது வெற்றியைப் பெற்றார்.

அதன் பிறகு உலகம் யாரிவர் எனத் தேடத்தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அமெரிக்காவுக்கு பத்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர் இவர் ஒருவரே..

பூர்விக அமெரிக்க சிறுவர்களுக்காக இவர் செய்த சேவைகளுக்காக ஜனாதிபதி பராக் ஒபாமாவால் கௌரவிக்கப்பட்டார்.

GABRIELA ANDERSEN -SCHIESS: பெண் வீராங்கனைகளுக்கான அழியாத நிலைப்பாட்டைக் கொண்டு வந்தவர்.

1984 வரை பெண்களுக்கான இடமாக மரதன் இருக்கவில்லை. பெண்களை சேர்க்கும் முடிவை எடுத்தபோது அது மிகவும்  சர்ச்சைக்குள்ளானது.

ஆகவே, அந்த காலத்தில் பங்குபற்றிய பெண்கள் பற்றி நினைத்துப் பாருங்கள். பெண்களின் எதிர்காலம் தங்கிருந்தது அவர்கள் தோளில். அவர்களுடைய திறன்வெளிப்பாடு ஒலிம்பிக் சங்கத்தை நியாயப்படுத்த வேண்டும்.

கேப்ரியேல்லா 39 வயதாக இருந்தார். இதுவே அவருக்கு முதலும் கடைசியும் என தெரியும். ஆகவே அவர் வெல்லாவிட்டாலும் சிறந்ததை வெளிக்கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தார்.

போட்டி நல்ல படியாகவே சென்றது. ஆனால் கடைசி நூறு மீட்டர்களில் அவர் ஒரு நீர்தரிப்பை விட்டதனால் அவர் அன்றைய தினம் இருந்த உச்சக்கட்ட வெயில் மற்றும் வெப்பத்தால் நீரிழந்து, பலமிழந்து போனார்.

அவர் மயங்கி விழ இருந்த நிலையில் அவரை தடகளத்தை விட்டு விலத்த முயற்சித்தும் அவர் அனுமதிக்கவில்லை. தள்ளாடி தள்ளாடி, உடல் எங்கோ எல்லாம் போக முழு முயற்சியால் சுயமாக வந்து சேர்ந்து போட்டியை முடித்தார்.

அவர் வெல்லாவிட்டாலும், பெண்களின் இதய பலத்துக்கு சான்றாக அமைந்து விடைபெற்றார்.

அந்தக் காணொளி இதோ…

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு

Image Source : https://wallpaperaccess.com/olympics

Post Views: 371
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!

  • May 25, 2020
View Post
Next Article
youtube trees

Youtube பிரபலங்கள் 20 மில்லியன் மரங்களை நடுகிறார்கள்

  • May 26, 2020
View Post
You May Also Like
ஒலிம்பிக்
View Post

ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!

வெஸ்ட்
View Post

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹீரோ கிறிஸ் கெய்ல்..!

கிரிக்கெட்
View Post

கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!

சங்கா
View Post

சங்காவின் பதவிக்காலம் முடிந்தது முதன்முறையாக எம்.சி.சி தலைவர் பதவிக்கு ஒரு பெண்..!

பீபா
View Post

2 வருடங்களுக்கு ஒருமுறை பீபா உலகக்கிண்ணம்..!

Live the Game
View Post

Live the Game ஐ.சி.சி இ20 உலக கிண்ண கீதம் அறிமுகம்..!

உலகக்கிண்ணத்திற்கு  ரசிகர்களுக்கு அனுமதி..!
View Post

உலகக்கிண்ணத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி..!

ஓமான்
View Post

ஓமான் நோக்கி புறப்பட்டது இலங்கைக் கிரிக்கெட் அணி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.