Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!

  • May 25, 2020
  • 979 views
Total
10
Shares
10
0
0

பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகளை நாம் இங்கு பார்போம்

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே அவ்வப்போது நம்மை ஆச்சரியப்படுத்தும் சில உண்மைகள் ஆங்காங்கே வெளிவந்து நம்மை திக்கு முக்காட செய்கின்றன. சூரிய ஒளியானது பல அணு குண்டுகளை விட ஆற்றல் மிக்கது விண்வெளியின் ஒளியை கேட்க முடியாத போன்ற விஷயங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் இதனை தவிர நாம் அறியாத மிக சுவாரஸ்யமான 08 விஷயங்களை அறிவியல் ஆராய்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

Full of Bacteria

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:https://www.pinterest.com/pin/776096948265708704/

மனித உடலைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் நன்கு அறிந்துள்ளதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். நாம் அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது அது என்னவென்றால் நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் எனும் நுன்னுயிர்கள் மனித உடலில் நுன்னுயிர்கள் இருப்பது சாதாரணம் தானே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நம் தோலின் அடிபகுதியில் காணப்படும் இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நம் உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அறைகலன் குடுவையில் பாதி அளவு இந்த பாக்டீரியாக்களை கொண்டு நிரப்பிவிடலாம் ஆனால் இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை இவை உடலின் செரிமானத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் பெருமளவு பங்காற்றுவது என்பது குறிப்பிடத்தக்கது.

The undead gene

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCEhttps://zombieresearchsociety.com/archives/29036

ஆம் ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது உடலின் மரபணுக்கள் தொடர்ந்து செயல்படும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன மரபணுக்களின் செயற்பாடு அவ் உடல் உயிரோடு இருக்கும் பொழுது இருந்ததை விட இறந்த பிறகு பன்மடங்கு அதிகமாக காணப்படுகிறது, கருவிலிருக்கும் பொழுது அதிக ஆற்றல் உடன் செயல் பட்ட இந்த மரபணுக்கள் அதன் பிறகு மனித இறப்பிற்குப் பிறகு அபரிதமாக செயல்படுவதாக மரபணு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

Sleeping trees

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCEhttps://www.pxfuel.com/en/free-photo-jhjsh

மனிதர்களை போன்றே தாவரங்களும் சுவாசிக்கின்றது என்பது பழைய செய்தி மனிதர்களை போலவே தாவரங்களும் உறங்குகின்றது என்பது தான் புதிய செய்தி
ஆம் ஆராய்ச்சியாளர்கள் லேசர் ஸ்கானிங் பாயிண்ட் கிளௌட் சிஸ்டம் உதவியுடன் தாவரங்களின் செயல்பாடுகளை குறித்து இரவு பகல் தொடர்ச்சியாக ஆராய்ந்ததில் அவைகள் மனிதர்களை போன்று ஓய்வு எடுப்பது தெரியவந்தது. இந்த ஓய்வு நேரம் என்பது தாவரங்களின் வகையினை சார்ந்து வேறுபடுகிறது சில தாவரங்களின் பூக்கள் இரவிலும் சில தாவரங்களில் பகலிலும் மலர்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பொதுவாக ஒய்வு நிலையில் தாவரங்கள் தளர்ந்து காணப்படுகிறது இந்த தளர்வு பருவ நிலை, வளரும் இடத்தை பொறுத்தும் அமையும் இதனால் ஆராய்சியாளர்கள் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவிலும் மற்றொரு தாவரத்தை பின்லாந்திலும் நட்டு அதன் செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவின் படி தாவரங்கள் ஒய்வு நிலைக்கு செல்வதாகவும் அப்பொழுது உயரம் 10 செண்ட்டி மீட்டர் சுருங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சூரிய ஒளி பட்ட சில மனி நேரத்திலேயே சுருங்கிய தாவரங்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுவதாகவும் கண்டறியப்பட்டதும் குறிபிடத்தக்கது.

Around the world 5 times

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:https://www.sciencelearn.org.nz/images/2653-the-earth-is-in-our-hands.

இந்த உலகம் மிகப் பெரியது நம்மால் இந்த உலகை நடந்தே சுற்றிவர முடியுமா? முடியுமென்றால் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று எண்ணி பார்க்கும் பொழுதே நம் தலை சுற்றுகிறது. நம் வாழ் நாளில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கணக்கில் கொண்டால் இந்த உலகத்தை 5 முறை நம்மால் சுற்றி வர முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது நாம் தவழும் பருவத்திலிருந்து இறக்கும் வரை நாம் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் சேர்த்தால் பூமியை 5 முறை சுற்றி வந்ததுக்கு சமமாகும் எனபது வியப்பான விசயமே.

Two metal objects in space

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:https://www.sciencenewsforstudents.org/article/major-gravity-experiment-recreated-aboard-satellite

இரண்டு தனிமங்களை எந்த ஒரு fusion நிகழ்வும் இன்றி நிரந்தரமாக ஒட்ட வைக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் இது சாத்தியமான நிகழ்வே ஆனால் இங்கு இல்லை விண்வெளியில் ஆம் மேற்பரப்பின் எந்த ஒரு குறைபாடும் இல்லாத ஆக்சிஜனேட்டர் நிகழாத இரண்டு தனிமங்களை குறிப்பிட்ட அழுத்தத்தில் நிரந்தரமாக ஒன்றாக இணைத்து விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

The mesentery

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:https://www.sciencealert.com/it-s-official-a-brand-new-human-organ-has-been-classified

mesentery (குடல் தாங்கி ) என்ற பெயரை நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை இது நம் உடல் பாகங்களை பற்றி நாம் படித்த அறிவியல் புத்தகத்தில் விட்டுப்போன ஒரு பெயர் என்று தான் சொல்லவேண்டும். ஆம் இது ஒரு உடல் உறுப்பாகும் இந்த mesentery வயிற்று பகுதியில் உள் அடுக்கையும் குடல் பகுதியையையும் இணைக்கிறது இந்த சவ்வு பகுதி மனிதன் இயக்க நிலையில் இருக்கும் பொழுது குடல் பகுதி நிலையாக இருப்பதற்கு உதவுகிறதாம். இது மட்டுமல்லாமல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த mesentery முக்கிய பங்காற்றுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Time crystals

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:https://physicsworld.com/a/in-search-of-time-crystals/

Crystals மற்றும் அதன் வடிவமைப்பு பற்றி நாம் அனைவரும் படித்து இருப்போம் பொதுவாக அணுக்கள் ஒரே மாதிரியான நிலையில் தொடர்ச்சியாக வரிசைபடுத்தப்பட்டு இருக்குமேயானால் அது crystals எனப்படும்.
இந்த வடிமைப்பானது முப்பரிமானத்தில் அமைந்துள்ளது. இதில் நான்காவதாக நேரம் ஒரு பரிமானமாக இணையும் பொழுது இந்த Time crystals உருவாகிறது. இது சமச்சீர் நிலைக்கு எதிரானதாகும். இது இயக்க நிலைக்கு செல்வதற்கு ஏதேனும் ஒரு தூண்டு சக்தியை சார்ந்தே இருக்கும் சிறிது அசைத்து விட்டாலும் கூட தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கும் ஜெலியே இதற்கு உதாரணமாக சொல்லலாம். காலத்தை புரட்டிபோட காத்திருக்கும் இதை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் இயர்பியல் வல்லுனர்களால் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருகின்றன என்பதும் குறிபிடத்தக்கது.

Gps destroy natural navigation

இந்த பிரபஞ்சத்தின் அறிவியல் சார்ந்த பல உண்மைகள்!!
IMAGE SOURCE:http://unbonmotgroundswell.blogspot.com/2013/07/gps-jamming-affects-everyone-even.html

Gps navigation என்ற டெக்னாலஜியின் வருகையினால் பழைய காகித வரைபடங்களின் உபயோகம் குறைந்து கொண்டே வருகின்றன மேலும் புதிதாக ஒரு இடத்தை கண்டுபிடிப்பது மிக சுலபமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ஒரு புறம் இது நமது கால விரயத்தை குறைத்தாலும் இதன் பக்க விளைவுகள் மிகவும் அபாயகரமானவை என்பதே உண்மை. Gps navigation என்ற டெக்னாலஜி நமக்கு தேவையான இடத்தை சுலபமாக காட்டி விடுகிறது இதனால் மூளையை சொந்தமாக யோசித்து ஆராய தேவையில்லை. இது மூளையின் செயல்பாட்டினை குறைத்து மலுங்கடிக்க செய்கின்றது என்பது வேதனையான விடயம் ஒன்று.

மேலும் விஞ்ஞானத் தகவல்கள் அறிய வேண்டுமா ? இதோ புவியின் காந்தப்புலம் பலமிழப்பதால் செயற்கைக் கோள்கள் பாதிப்பு பற்றி அறியுங்கள்

image source:https://www.freepik.com/free-vector/people-working-science-lab_7362156.htm

Post Views: 979
Total
10
Shares
Share 10
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
SpaceX க்கு உதவிய மூளைப் பயிற்சியாளர் வழங்கும் 3 தந்திரங்கள்

SpaceX க்கு உதவிய மூளைப் பயிற்சியாளர் வழங்கும் 3 தந்திரங்கள்

  • May 25, 2020
View Post
Next Article
ஒலிம்பிக்

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளும் : முன்னுதாரணமான 5 கதைகளும்

  • May 26, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கையாக தோல் பராமரிப்பு செய்ய வீட்டில் உள்ள சில பொருட்கள்..!

கனவுகளும் பலன்களும்
View Post

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 38

தில்லை நடராஜர் திருக்கோயில் உருவாக காரணமாக இருந்த சம்பவம்
View Post

தில்லை நடராஜர் திருக்கோயில் உருவாக காரணமாக இருந்த சம்பவம்

ஆஞ்சநேயர்
View Post

ஆஞ்சநேயர் / அனுமன் எடுக்கும் 5 வித்தியாசமான வடிவங்கள்

இந்த வார்த்தைகளால் எக்காரணத்தைக் கொண்டும் திட்டாதீர்கள்...!!
View Post

இந்த வார்த்தைகளால் எக்காரணத்தைக் கொண்டும் திட்டாதீர்கள்…!!

காமெடிக் கவிதைகள்
View Post

காமெடிக் கவிதைகள் : சும்மா வாசிச்சு பாருங்க – செவ்வாய் சிந்தனைகள் | சிந் -3|

திருஷ்டி
View Post

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது திருஷ்டி கழிக்க தவறாதீர்கள்..!!

நேர்முக
View Post

நேர்முகத் தேர்வில் நீங்கள் கையாள வேண்டிய உத்திகள்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.