தசுன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் ஓமான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இலங்கை அணிக்கான ஓமான் பயணத்தின் படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புறப்படவிருந்தது.
ஆனால் ஓமானில் மோசமான வானிலை காரணமாக இலங்கை அணி புறப்படுவதை ஒருநாள் தாமதப்படுத்த வேண்டியிருந்தது.
எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்திற்கான ஒரு பயிற்சி ஆட்டமாக ஓமானுக்கு எதிராக இலங்கை இரண்டு போட்டிகளில் விளையாடுகின்றது.
ஓமான் அணியுடனான போட்டிகளை தொடர்ந்து இருபதுக்கு – 20 உலககிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் மூன்றிலும் ஆடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அதனை தொடர்ந்து இருபதுக்கு – 20 உலக கிண்ணத்தின் முதல் சுற்றில் எதிர்வரும் 18ஆம் 20ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நபீமியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை முறையே எதிர்கொள்கின்றது.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் யோர்க்கர் மன்னன் லசித் மலிங்க ஓய்வு..