ஐ.சி.சி தனது உயரிய விருதான ஓல் ஒவ் வேம் Hall of Fame விருதை குமார் சங்கக்காரவுக்கு வழங்கியுள்ளது.
இவரோடு சேர்த்தும் மொத்தம் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த விருதினால் கௌரவிக்கப்பட்டார். அதன் படி ஓல் ஒவ் வேம் விருது பெறும் இரண்டாவது நபர் குமார் சங்கக்கார என்பது விசேட அம்சமாகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி ) சார்பில் சாதனை படைத்த நட்சத்திரங்கள் ஓல் ஒவ் வேம் பட்டியலில் இடம் பெறுவோர். 10 வீரர்களை ( ஐ.சி.சி ) சேர்த்துள்ளது இதற்காக ஐந்து பிரிவுகளாக வீரர்களை தேர்வு செய்தது.
இப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய வீர்களின் விபரம்
- வினு மன்கட் ( இந்தியா )
- டெட் டெக்ஸ்டர் ( இங்கிலாந்து )
- அப்ரி போல்க்னர் ( தெ.ஆ )
- மோண்டி நோபல் ( ஆஸி )
- சேர் லியரி கொன்ஸ்டன்டைன் (விண்டிஸ்)
- ஸ்டோன் மெக்கேப் ( ஆஸி )
- டெஸ்மண்ட் ஹேன்ஸ் (விண்டிஸ்)
- பொப் வில்லிஸ் ( இங்கிலாந்து )
- அன்டி பிளவர் (சிம்பாப்வே )
- குமார் சங்கக்கார ( இலங்கை )
24 பந்துகள் வீசுவதில் பிரச்சினையில்லை ஆனால் 02 கிலோமீற்றர்?
24 பந்துகளை வீச முடியும் ஆனால் உடல் தகுதி பெற என்னால் 02 கிலோமீற்றர் தூரத்தை ஓடிக் கடக்க முடியாது என்று லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
ரஸல் ஆர்னோல்டின் சில்லிங் வித் ரஸல் யூடியூப் அரட்டையில் பங்கேற்ற போதே லசித் மலிங்க அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மலிங்க தனது தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் இலங்கைத் கிரிக்கெட்டின் உடற் தகுதி கொள்கைகள் குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களையும் தெரிவித்தார்.
நான் ஓய்வு பெறப் போவதில்லை என்னால் 24 பந்துகளை வீச முடியும் 02 கிலோமீற்றர் தூரத்தை ஓட முடியவில்லை அதனால் தான் நான் வீட்டிலேயே இருக்கிறேன் எவ்வாறாயினும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் என்னால் பந்து வீச முடியும் என்று மலிங்க தெரிவித்தார்.
நான் கண்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 04 பந்துகளில் 04 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அப்போது எனக்கு 37 வயது அந்த சந்தர்ப்பத்தில் உடற் தகுதி குறித்து யாரும் புகார் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்