தொடக்க காலங்களில் தேர்ப்பந்தயமும் ஒலிம்பிக்கில் நடைபெற்றது. ஆதி காலத்தில் கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பரிசாக, தங்கமோ வெள்ளியோ தரப்படவில்லை ஒலிவ் இலைக் கொழுந்தை பறித்து வளைத்து தலையில் சூட்டப்பட்டது அவ்வளவுதான்.
அதனால் நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 1896 முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டபோது வெற்றியாளர்களுக்கு வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒலிவ் இலைகளே பரிசாக அளிக்கப்பட்டன.
இரண்டாவது மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு தாமிர பதக்கமும் லாரெல் இலையும் அணிவிக்கப்பட்டது.
தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடம் பெறுபவர்களுக்கு டிப்ளமோ வழங்கப்படுகிறது. பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு பதக்கம் அளிக்கப்படுகிறது.
ஒலிம்பிக்ஸின் கோட்பாடு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறுவதே முக்கியமானது வெற்றியடைவதல்ல முக்கிய நோக்கம் நல்லவிதமாக போராடுவதுதான்.