தொண்ணூறுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பட்டறையில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வருவது குறைந்துவிட்டது.
பிரையன் லாரா, சந்தர்பால் என டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்கள் கோலோச்சினாலும், கிரிக்கெட் வெள்ளை உடையை புறக்கணித்து, வெள்ளைப் பந்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.
பிரையன் லாரா, கரீபியத் தீவுகளில் லாராக்களை உருவாக்கவில்லை. வெஸ்ட்
இண்டீஸ் ரசிகர்களுக்கு ஹீரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.
அப்போதுதான் கிரிக்கெட்டில் புதியதோர் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் கிறிஸ் கெய்ல்.
நாடுகள் கடந்து இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இதற்கு காரணம் அவர் டி20 போட்டிகளில் சிக்ஸர்கள் அடித்து வானவேடிக்கை காட்டுவதுதான்.
2005ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச டி20 போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், உலகம் அதை உற்றுநோக்கத் தொடங்கியது 2007 டி20 உலகக் கோப்பைதான்.
அப்போதுதான் அந்த உலகின் ஒவ்வொரு வீதியிலும் ஊடுறுவ தொடங்கியது.
முதல் போட்டியிலேயே சதமடித்து இதுதான் டி-20 என்று உலகுக்கு உணர்த்தியது கெய்ல் சூறாவளி.
இன்று வெஸ்ட் இண்டீஸ் என்பது டி20 அணியாக அடையாளப்படுத்திருக்கிறது. கெய்ல்,ஈவின் லூயிஸ், சிம்மன்ஸ், ஹிட்மெயர்.பூரன், டுவைன் ஸ்மித், ரஸல் போன்ற முரட்டு ஹிட்டர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் புதியதோர் அடையாளம் பெற்றது. டி20 உலகக் கோப்பை
புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியது.அடுத்த தலைமுறை அதைக் கவனிக்கத் தொடங்கியது.இன்று டி-20 கிரிக்கெட்டை அழித்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது.
அப்படியிருக்கும்போது டி20 மட்டும் கவனம் செலுத்தும் கரிபியர்களை,
அதற்குக் காரணமான கெய்லையும் கொண்டாடுவது சரியா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.
கெய்லின் அணுகுமுறைதான் வெஸ்ட் இண்டீஸில் இந்தப் புரட்சிக்கு வித்திட்டதே தவிர கெய்லை டி20 வீரர் என்று அடையாளப்படுத்தி விட முடியாது.
- அவர் அதிரடி வீரர் எந்த நிற பேதமும் இல்லாதவர்.
- ஜெர்ஸியின் வண்ணம் அவருக்கு பெரிதில்லை
- பந்தின் வண்ணம் பற்றி கவலையில்லை
- மைதானத்தில் பறக்கும் தேசியக்கொடியின் வண்ணம் பற்றியும் பிரச்சனையில்லை.
கெய்லை நோக்கிப் போகும் பந்துகள் பௌண்டரிகள் நோக்கிப் பறக்கும்.
இப்போது எல்லா டி20 தொடர்களிலும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்.
42 வயதிலும் டி20 ஆடுகிறார். அவரிடம் இப்போது போய் மைக்கை நீட்டினாலும், தன்னை டெஸ்ட் அணியில் சேர்க்காத தேர்வாளர்களைக் கடித்துக் குதறுவார்.
நாளை தேர்வு செய்தாலும் வந்து விளையாடுவேன் என்பார். அவருக்கு
பெயரோ,புகழோ,பணமோ தேவையில்லை. அவருக்கு பந்துகளைப் பறக்கவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்..!