விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு தவான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாதம் 28ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
முழுத் தொடரும் கொழும்பில்
இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் இருபதுக்கு – 20 தொடர் முழுவதும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் பார்வையாளர்கள் எவருமின்றி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணைப்படி ஒரு நாள் தொடர் ஜூலை 13 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதி நிறைவு பெறுகிறது. இருபதுக்கு – 20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி ஜூலை 25 அன்று நிறைவு பெறுகிறது.
ஒரு நாள் தொடர்
- முதல் ஒரு நாள் ஜூலை 13
- 02ஆவது ஒரு நாள் ஜூலை 16
- 03ஆவது ஒரு நாள் ஜூலை 18
இருபதுக்கு – 20 தொடர்
- முதல் இ-20 ஜூலை 21
- 02ஆவது இ-20 ஜூலை 23
- 03 ஆவது இ-20 ஜூலை 25
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் மீண்டும் தொடங்குவதை பிசிசிஐ உறுதி செய்தது
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்