நவோமி ஒசாகா டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார்
முன்னணி வீராங்கனையான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனையடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு 15 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
பங்களாதேஷ் பயிற்சியாளராகிறார் ரங்கன ஹேரத்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி செயற்பட்டு வந்தார்.
அவரின் இடத்திற்கே தற்போது ரங்கன ஹேரத் நியமிக்கப்படவுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற சாதனைக்குரியவரான ரங்கன ஹேரத் கடந்த 2018 ம் ஆண்டு ஒய்வு பெற்றமை குறிபிடத்தக்கது.
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் மீண்டும் தொடங்குவதை பிசிசிஐ உறுதி செய்தது