இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் இருபதுக்கு 20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்த இருபதுக்கு 20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பல்வேறு செய்திகள் இது தொடர்பாக வெளியாகி வந்த நிலையில் தற்போது விராட் கோலி தனது அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார்.
இருபதுக்கு-20 அணிக்கு மட்டும் ரோஹித் ஷர்மா தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
விராட் கோலியின் தலைமைப் பதவி பறிக்கப்படபோவதாக அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியே நீடிப்பார் என்று கிரிக்கெட் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் விராட்கோலி இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.