ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் 08-08-2021 அன்று நிறைவடைந்தன.
ஒலிம்பிக் மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் சர்வதேச குழுவின் தலைவர் தோமஸ் பாக் ரோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்கான போட்டிகள் பாரிஸ் நகருக்கு மாற்றப்படுவதற்கான அறிவிப்பாக பிரெஞ்சு கொடி ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் ஒலிம்பிக் சுடர் ஒலிம்பிக் அணைக்கப்பட்டது.
முன்னதாக, மரதன் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விழா மேடையில் பேரிகை முழங்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் நடனம் இடம்பெற்றது.அத்துடன், ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டன.
அத்துடன், பாரம்பரிய இசையும் இசைக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு நிறைவில் வாணவேடிக்கைகளும் இடம்பெற்றன.
நிறைவு பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்கள் 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா.
38 தங்கப் பதக்கங்களை வென்ற சீனா 2-ஆவது இடத்தைப் பிடித்தது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கப் பதக்கங்களுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை சேர்பியா கைப்பற்றியது. இலங்கை எந்தப் பதக்கத்தையும் கைப்பற்றவில்லை.