தோல்விகளை வாரிக்குவித்துள்ள இலங்கை முதலிடத்தில்
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 இருபதுக்கு 20 மற்றும் 03 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.முன்னதாக நடந்த இருபதுக்கு 20 தொடரில் வைட் வாஷ் ஆனது இலங்கை.
ஒருநாள் தொடரிலாவது ஏதாவது புதுமை படைக்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் 06 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 08 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வி கண்டது இலங்கை அணி.
அத்தோடு ஒருநாள் தொடரையும் பறிகொடுத்து விட்டது. இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 428 போட்டிகளில் தோற்றிருக்கிறது
உலகின் வேறு எந்த அணிகளையும் விட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்ற அணி எனும் மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது.
50 ஓவர்கள் உலகக்கிண்ணம் இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் என்று இரு உலகக் கிண்ணங்களை வென்ற அணி இந்த மோசமான பதிவை கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 06 ஆண்டுகளாக இலங்கை அணி எந்த ஐ.சி.சி கிண்ணத்தையும் வெல்லவில்லை.
இந்த வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
பயிற்சிகளை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தமது பயிற்சிகளை ஆரம்பித்தது. இலங்கைக்கு வந்துள்ள தவான் தலைமையிலான இந்திய அணியானது ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் 06 போட்டிகள் உள்ளன. மூன்று ஒருநாள் போட்டிகள் ஜூலை 13-16 மற்றும் 18 ஆகிய திகதிகளிலும் அதை தொடர்ந்து மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் ஜூலை 21-23-25 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய அணியானது தனிமைபடுத்தலில் இருந்தது இந்திய அணிக்கு முன்னால் வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்