பதினாறு அணிகள் பங்கேற்கும் ஏழாவது இருபதுக்கு 20 உலக
கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர் வரும் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
முன்னர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் வேறு வழியின்றி இந்த போட்டிகள் இவ்வாறு மாற்றப்பட்டது.
தரவரிசையில் முதல் 08 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர்
12 சுற்றில் விளையாடவுள்ளன.
அதே போன்று எஞ்சிய நான்கு அணிகள் முதலாவது சுற்றிலிருந்து தேர்வாகும். சூப்பர் 12 சுற்றில் தலா 6 அணிகள் வீதம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
குழு 02 இல் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான்,நியூசிலாந்து. ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் இடம் பெறுகின்றன.
கிரிக்கெட்டில் எதிரும் புதிருமான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 24 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.