பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டி 20 போட்டியில் ஆறு விக்கெட்டுகளை போல்ட் முறை மூலம் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராக ஆனார்.
அஃப்ரிடி ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் நடந்த டி 20 ப்ளாஸ்ட்டில் அரிய இரட்டை ஹாட்ரிக் மூலம் கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார்.
அஃப்ரிடியின் நம்ப முடியாத பந்து வீச்சு பெறுதி
20 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, மிடில்செக்ஸ் கழகத்துக்கு எதிராக ஹாம்ப்ஷயருக்காக விளையாடி வருகிறார். நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 6 விக்கெட்டுக்களுக்கு 19 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்த நம்பமுடியாத பந்து வீச்சுப் பெறுதியைக் கைப்பற்றினார்.
இதில் நான்கு விக்கெட்டுக்கள் போல்ட் முறை மூலம் கைப்பற்றப்பட்டதால் அரிய இரட்டை ஹாட்ரிக் இன்னும் அரிதாகிவிட்டது.
வெற்றி பெற 142 ஓட்டங்களைத் துரத்திய மிடில்செக்ஸ் அணிக்கு இறுதி 18 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளுடன் 23 ரன்கள் தேவைப்பட்டது.
இலகுவாக வெல்லப்படக்கூடிய அந்தப் போட்டியை தம் வசம் மீளக் கொண்டு வர ஷாஹீனிடம் சில யோசனைகள் இருந்துள்ளன. இறுதி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் இறுதி நான்கு விக்கெட்டுகளை லாவகமாக வீழ்த்தினார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் , ஜான் சிம்ப்சன், ஸ்டீவ் ஃபின், திலன் வலலவிதா மற்றும் டிம் முர்டாக் ஆகியோரின் ஸ்டம்புகளை அடுத்தடுத்த பந்துகளில் சிதறடித்தார்.
டி 20 வரலாற்றில ஒரு பந்து வீச்சாளர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது முறையாகவும், ஒரு பாகிஸ்தானியர் இதனை செய்த முதலாவது தடைவையாகவும் இச்சம்பவம் அமைந்தது.
ஷாஹீனின் புள்ளிவிவரங்கள் (6-19) ஒரு ஹாம்ப்ஷயர் பந்து வீச்சாளரால் வீசப்பட்ட மிகச் சிறந்தது, மற்றும் பாகிஸ்தானியரால் வீசப்பட்ட மூன்றாவது சிறந்த பந்து வீச்சுப் பெறுதிக்கு சமனானது.
நம்பமுடியாதபடி, ஷாஹீனின் ஆட்டமிழப்புகள் அனைத்தும் போல்ட் முறைப்படி இருந்ததே சாதனை – இது ஒரு டி 20 போட்டியில் நடந்த முதல் முறையாகும்.
வீரஇன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அஃப்ரிடி தனது வீராதி வீரங்களைக் காட்ட முன் இடம்பெற்ற ஆறு ஆட்டங்களிலும் 191 எனும் சராசரியுடன் ஒரே ஒரு விக்கட்டை மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த ‘அசாதாரண’ காட்சிகளைக் சமூக ஊடகங்களில் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் திரிகின்றனர்.
தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
இதையும் படிக்கலாமே :ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை
இது போன்ற மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு எமது விளையாட்டுச் செய்திகள் பகுதியை வாசியுங்கள்.
முகப்பு பட உதவி : ஸ்போர்ட்ஸ்.அவு