கொரோனா காலம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடுக்க கார்ட்போர்ட் கட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வீரர் ஒருவர் வெளியிட்ட பகிரங்க புகைப்படங்களால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சமூக இடைவெளி முக்கியம் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாத கார்ட்போர்ட் கட்டிலை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா தடகள வீரர் போல் கெலிமோ தனது டுவிட்டரில் உடலுறவுக்கு எதிரான கார்ட்போர்ட் கட்டில் என்று புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது இந்த கார்ட்போர்ட் கட்டில்கள் ஒருவருக்கு மேல் தாங்காது உடைந்து விடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒலிம்பிக் அமைப்பு இதனை கடுமையாக மறுத்துள்ளது. ஒலிம்பிக் கட்டில்கள் வலிமையானவை என்று கூறியுள்ளது.
அயர்லாந்து ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்லினாகன் அந்த கட்டிலில் ஏறி குதித்து கட்டில் வலிமையாக உள்ளது என்று காணொளியை வெளியிட்டு கார்ட்போர்ட் கட்டில் ஒரு போலி செய்தி என்று தெரிவித்துள்ளார்.
மெக்லினாகன் இந்த காணொளியை வெளியிட்டதற்கு ஒலிம்பிக் கமிட்டியே அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஏற்கனவே கட்டில்களை ஒலிம்பிக்கிற்காக உருவாக்கிய ஏர் வீவ் நிறுவனம் கட்டில்கள் 200 கிலோ எடையைத் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
எனவே இரண்டு பேரை தாங்கும் தன்மை கொண்டதே என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது…
வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி