இலங்கை கிரிக்கெட் அணியின் உலககிண்ண போட்டிகளுக்கான ஆலோசகர் பதவியில் மஹேலவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ண போட்டிகளில் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டதை போன்று இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் ஆலோசகர் ஒருவர் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்படுவதாக இருந்தால் அது நிச்சயமாக மஹேலவாக மட்டுமே இருக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்கவே மஹேல ஜெயவர்தன இலங்கையின் இளையோர் அணியின் ஆலோசகராக ஊதியமற்று சேவையாற்ற இணங்கினார் எனவும் கூறப்படுகிறது.
ஆலோசகராக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்படுபவராக இருந்தால் இலங்கைக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகப் பெரும் நம்பிக்கையை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.