உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது!!
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் 100 வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் அவருடைய சம்பாத்தியம் 800 கோடியாக ரூபாயாக உயர்ந்துள்ளது.
முதல் இரு இடங்களில் இருந்த போர்த்துக்கல் கால் பந்து நட்சத்திரம் கிறிஸ்டினோ ரொனால்டோ அர்ஜென்டினா வை சேர்ந்த லயனல் மெஸ்ஸி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குழுவாக விளையாடும் வீரர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது அவர்களுடடைய வருமானம் குறைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ரொனால்டோ 787 கோடி ரூபாயும் மெஸ்ஸி அவரை விட ஏழரை கோடி ரூபாய் குறைவாகவும் சம்பாதிக்கின்றனர்.
பிரேசில் கால் பந்து வீரர் நெய்மர் 716 கோடி ரூபாய் உடன் நான்காம் இடம் பிடித்து இருக்கிறார்.
கூடை பந்து விளையாட்டு வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 666 கோடி ரூபாய் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இரு பெண்கள் மட்டுமே இடம் பிடித்து இருக்கின்றார்கள்.
ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 280 கோடியே 50 லட்ச ரூபாய் வருவாயை பெற்று 29 ம் இடத்தில் இருக்கிறார்.
நவோமி ஒசாகா வை விட நான்கு இடங்கள் கீழே உள்ள செரினா வில்லியம்ஸ் 270 கோடி சம்பாதித்து இருக்கிறார்.
இந்த 100 பேரில் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்று உள்ளார்.
கடந்த ஆண்டு 100 வது இடத்தில் இருந்த விராட் கோலி 34 இடங்கள் முன்னேறி 66 வது இடத்தை பிடித்து இருக்கிறார்.அவருக்கு ஓராண்டில் 195 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது. இதன் 180 கோடி ரூபாய் விளம்பரங்களில் தோன்றியதன் மூலமாகவும் 15 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் வெற்றிக்கான பரிசு தொகை மூலமும் அவருக்கு கிடைத்து உள்ளது. முதல் நூறு இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் உதவி போர்ப்ஸ் பத்திரிக்கை
image source:https://www.karmahangover.com/world/types-of-sports-events/