இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளின் பயணம் பற்றிப் பார்த்தால், அவை இரண்டு விஷயங்களில் ஒத்தவையாகும். ஒன்று, இருவரும் கிண்ணத்தை வென்றவர்கள். இரண்டு, அவர்கள் இருவருக்கும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் ஒவ்வொரு முறையும் நாக் அவுட்களை எட்டியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சிறிது ஒழுங்கீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
Table of Contents
இந்தக் கட்டுரையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
CSK – RR இதுவரை
- விளையாடிய மொத்த போட்டிகளின் எண்ணிக்கை: 22
- RR வென்ற போட்டிகள்: 8
- CSK வென்ற போட்டிகள்: 14
- இந்தியாவில் விளையாடியது: 19 (RR 8, CSK 11)
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய போட்டிகள்: 1 (RR 0, CSK 1)
- CSKவுக்கு எதிரான RR சராசரி மதிப்பெண்: 155
- RRக்கு எதிரான CSK சராசரி மதிப்பெண்: 163
- RRக்கு அதிக ரன்கள்: 146 (ஜோஸ் பட்லர்)
- CSK-க்கு அதிக ரன்கள்: 423 (எம்.எஸ். தோனி)
- RR க்கு அதிக விக்கெட்டுகள் : 5 (ஜோஃப்ரா ஆர்ச்சர்)
- CSK-க்கு அதிக விக்கெட்டுகள்: 15 (ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ)
- RR க்கான பெரும்பாலான கேட்சுகள் : 5 (ஜோஸ் பட்லர்)
- CSK க்கான பெரும்பாலான கேட்சுகள்: 13 (எம்.எஸ். தோனி)
சென்னைக்கு இருக்கும் சவால்கள்
துடுப்பாட்டம்
ஜோஸ் பட்லர் நின்று விளையாடும் திறமையுள்ள வீரர். தோனி முதலாவதாக துடுப்பெடுத்தாட முடிவு செய்தால், இவரை பந்து வீச்சின் பொழுது முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்துவது நல்லது.
ஸ்டீவ் ஸ்மித் தலைவராக மற்றும் ஒரு துடுப்பாட்ட வீரராக நிச்சயம் சென்னைக்கு ஒரு பிரச்சனைதான். அது மட்டுமில்லாமல், கொல்கத்தாவிருந்து 3 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் உத்தப்பா சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினால், அவரும் பிரச்சனையாக அமையக்கூடிய சக்தியுள்ளவர்தான் .
டேவிட் மில்லர் அடுத்த ஆபத்து நாளைய போட்டியில் அவர் விளையாடினால், அவருக்கு பந்து வீசுபவர்கள் பவர் பிளெயின் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லாவிட்டால், அதிகரித்த ஓட்டங்களை துரத்த அல்லது இறுதி ஓவர்களில் குறைவான ஓட்டங்களுக்குள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
துடுப்பாட்டத்தில் அடுத்த ஆபத்து, பென் ஸ்டோக்ஸ். இவர் டெத் ஓவர்கள் எனப்படும் இறுதி 5 ஓவர்களில், ஸ்பெஷலிஸ்ட். கடினமான இலக்குகளைத் துரத்துவதும், குறைந்திருந்த ஓட்டத்தை சடுதியாக மாற்றுவதும் இவரது அடாவடி அடிகளின் திறமை. எதிரணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மரண பயத்தைக் காட்டும் இவரை விளாசி விளையாட வைத்து ஆட்டமிழக்கச் செய்வதற்கான சரியான தந்திரத்தை தோனி வகுப்பது நல்லது.
இவர்களைத் தவிர சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஷாஷாங்க் சிங்க் ஆகியோரும் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரர்கள்.
சென்னை முதலில் துடுப்பெடுத்தாடினால், பந்து வீச்சு முதல் ,கடைசி 5 ஓவர்களில் மிகவும் பலமாக இருக்க வேண்டும்
பந்து வீச்சு
இங்கிலாந்தை சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மேற்கிந்தியாவின் ஓசேன் தாமஸ். இரண்டு பேருமே சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஐபிஎல் ற்கும் பயத்தை வரவழைக்கும் பந்து வீச்சாளர்கள். வலது கை வேகப்பந்து வீச்சாளரான, ஜோப்ரா ஆர்ச்சர் அதில் மிக முக்கியமானவர். சென்னைக்கு எதிராக RR இற்கு அதிக விக்கெட்டுக்களை பெற்றுக் கொடுத்தவர் அவர். இவரும் தோமஸும் சேர்ந்து போட்டியின் ஆரம்பத்தில் மற்றும் இறுதியில் கொடுக்கும் சவால்களை எதிர்க்க சென்னையால் முடியுமானால் ; சென்னையின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இந்த இருவரையும் சமாளித்து முன்னேறினால், சென்னையின் வெற்றி நிச்சயம்.
இங்கு அடுத்த பிரச்சனை மயங்க் மார்கண்டே. சென்னையின் பலவீனங்களில் ஒன்று சுழற்பந்து. டோனி , வற்சன் போன்ற பெரும் தூண்களுக்கு இது ஒரு சவால். ஆனால், சூழலை அழகாக சமாளிக்கும் ரெய்னா இல்லாத இடத்தில், அம்பத்தி ராயுடு மும்பைக்கு எதிரான போட்டி போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இப்பிரச்சையும் தீர்ந்து விடும்.
கடைசிச் சிக்கல் கொஞ்சம் சமாளிக்கக் கூடியதுதான். கட்டாயமாக 3 ஓவர்களுக்கு மேல் வீசும் பென் ஸ்டோக்ஸ் நன்கு ஓட்டங்களைக் கொடுக்கக் கூடியவர், சரியாக பயன்படுத்தப்பட்டால். அதனை கவனிக்கும் சென்னையின் திட்டம்தான் வெற்றிக்கான பாதை.
சென்னை முதலில் பந்து வீசினால் மில்லர் மற்றும் பென் ஸ்டோக்சின் கைகளில் கடைசி 5 ஓவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
இந்த ஆய்வு தனி நபர் கருத்துக்களையும், புள்ளி விபரங்களையும் அடக்கியதே. ஆளுக்காள் கருத்து வேறுபடலாம். இருந்தாலும், எமது கருத்துக்களுடன் நீங்கள் ஒத்துப் போகிறீர்களானால், அதனை எமக்கு கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவியுங்கள்.
முகப்பு படம் : கடன் / த குயின்ட்