மீண்டும் ஐ.பி.எல். தொடரில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்திலையில் மீண்டும் தொடர் ரத்தாகுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 2021 தொடரை ஒருவழியாக படாதபாடு பட்டு, எல்லா கிரிக்கெட் நிர்வாகங்களிடம் பேசி மன்றாடி வீரர்களை விளையாட அமீரகத்தில் கடந்த செப் 19ஆம் தேதி தொடங்கி நடத்திவருகிறது.
இந்திய கிரிக்கெட் சபை தற்போது தமிழக வீரர் நடராஜன் மூலமாக ஐ.பி.எல் தொடரில் நுழைந்துள்ளது கொரோனா.
நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில் நடராஜன் பங்கேற்கவிருந்த ஹைதராபாத் அணியும் கேபிட்டல்ஸ் அணியும் மோதின.
நடராஜனுக்கு நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பிறகு இவர்கள் 6 பேருக்கும் நேற்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என்று நேற்று பிற்பகல் ரிசல்ட் வெளியானது. இதனால் திட்டமிட்டபடி இன்றைய போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விஜய் சங்கர் உட்பட 6 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று நேற்று ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. மகிழ்ச்சிக்குறியதுதான்.
ஆனால் கொரோனா வைரஸை பொருத்தவரை அது மூன்று நாட்களுக்கு உடலில் எந்தவித அறிகுறியும் கொடுக்காமல் இருந்து அதன் பிறகே வேலையைக் காட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அப்படி இருக்கையில் நேற்றைய நெகட்டிவ் முடிவு வந்துவிட்டது என்பதற்காக அந்த ஆறு பேரில் ஒருவரான போட்டியில் விளையாடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு இன்னும் இரண்டு நாட்கள் கழித்து கொரோனா இருப்பது உறுதியானால் என்ன செய்வது?
அவர் போட்டியில் விளையாடினால் அணியில் உள்ள அனைத்து வீரர்களுடன் நெருங்கி இருக்க நேரிடும். விக்கெட் விழுந்தால் கட்டிப்பிடித்து கொண்டாட நேரிடும். இவ்வளவு ஏன் சமயத்தில் நடுவரிடம் கூட நெருக்கமாக இருக்க நேரிடும் அப்படி எனில் இவர்கள் அனைவரின் நிலை என்னவாவது?
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடங்குவதற்கு அன்று காலை இந்தியாவின் பிஸியோ தெரபிஸ்ட்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்திய வீரர்கள் பலர் அவரிடம் நெருக்கமாக இருந்ததால் போட்டியில் களமிறங்கி விளையாட அச்சம் தெரிவித்து பின்வாங்கியது இந்திய அணி.
அதற்கு இந்திய அணி தரப்பில் பிஸியோவுடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடினால் மற்ற வீரர்களும் அதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காரணம் சொல்லப்பட்டது.
இத்தனைக்கும் அனைத்து இந்திய வீரர்கள் கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தது. அப்படியிருந்தும் இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை.
இப்போது அதே காட்சி அப்படியே ஐ.பி.எல் தொடரில் பிரதிபலித்துள்ளது நடராஜனுக்கு மட்டும் கொரோனா உறுதியாக மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.
ஆனால் இப்போது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட முடிவு போல் போட்டி நிறுத்தப்படவில்லை திட்டமிட்டபடி நடக்கிறது.
அப்படி எனில் சர்வதேச கிரிக்கெட்டில் கொரோனா ஏற்பட்டபோது போட்டியே ரத்து செய்யப்பட்ட நிலையில் ஐ.பி.எல் தொடரில் மட்டுமே இந்த போட்டி ரத்து செய்யப்படவில்லை? அல்லது ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்படவில்லை.