எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆளும் மன்றம் கூட உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆளும் மன்றம் (ஜி.சி) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளதனால் , ஒவ்வொரு ஐ.பி.எல் அணியின் பலமும் அந்த நேரத்தில் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும். அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளுக்கான நியம இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு ஐ.பி.எல் குழுவானது சாதாரணாமாக குழாமுக்கு 25 – 28 வீரர்களைக் கொண்டதாக அமைந்திருப்பதோடு 10 – 15 உதவி ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். நமக்குத் தெரிய வந்துள்ள தகவல்களின்படி ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் தன்னுடைய குழாமுக்கான உயிரியல் பாதுகாப்பு குமிழி வலையத்தை போட்டிகள் தொடங்க ஒரு மாதத்துக்கு முன்பே ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் குழாமை மட்டுப்படுத்துவது என்பது சர்ச்சைக்குரியதாக அமையலாம். இதற்கு முன்னர் 2014 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகள் நடைபெற்றபொழுது அனைத்து அணிகளும் மட்டுப்படுத்தப்பட்ட அணியையே தம்முடன் அழைத்துச் சென்றது. பெரும்பாலும் அணிகள் ஐ.பி.எல் சீஸனின் மத்தியில் முதல் 11 பேருக்குள் தெரிவாக வாய்ப்பில்லாத வீரர்களை தமது அணியிலிருந்து தளர்த்திவிடும்.
ஐ.பி.எல் பாதுகாப்பு ஏற்பாடுகள்
- உயிர்-பாதுகாப்பான குமிழி: ஒவ்வொரு குழுமமும் அதன் சொந்த குமிழியை உருவாக்கும், அதில் குழு தங்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் அவர்களுக்கு பி.சி.சி.ஐ ஆல் நியமிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐ.எம்.ஜி ஊழியர்களுக்கும் , ஒளிபரப்பாளர்கள் போன்றவர்களுக்கும் இதேபோன்ற குமிழி உருவாக்கப்படும். முன்பே நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களை தவிர வேற யாரும் இவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- வருவாய் குழாம் : அனைத்து 60 ஐபிஎல் போட்டிகளும் 51 நாட்களில் விளையாடப்படுவதால், பிசிசிஐயின் மத்திய வருவாய் குழாம் விநியோகத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
- வாயில் வசூலிப்பு : ஐபிஎல் நடக்கவில்லை என்றால், உரிமையாளர்கள் எந்த வருமானத்தையும் பார்க்க முடியாது. ஆகவே வாயில் வசூலிப்பை விட்டுவிடப்போகிறோம் என்று வாரியம் கூறுகிறது, “பரிதாபம்”.
- பயணம் மற்றும் தங்குமிடம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கள் சொந்த பயண ஏற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை உரிமையாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும். பி.சி.சி.ஐ ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒருங்கிணைந்து “தள்ளுபடி செய்யப்பட்ட ஹோட்டல் கட்டணங்களை” உறுதிசெய்து அதை உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும். பி.சி.சி.ஐ வழங்கிய தெரிவுகளுக்கு ஏற்ப தீர்வு காண்பது அல்லது அவற்றின் சொந்த ஏற்பாடுகளைச் செய்வது உரிமையாளரின் விருப்பமாக இருக்கும். இந்தியாவில் ஐபிஎல் போட்டியைப் போலவே உரிமையாளர்களும் தங்கள் வீரர்களை யுஏஇ க்கு அழைத்துச் சென்று மீள்வதில் உள்ள தயாராக்கல் செயற்பாடுகளை பொறுப்பேற்கும்.
- மருத்துவ உதவி: உரிமையாளர்கள் தங்கள் சொந்த மருத்துவ குழுக்களுக்கு ஏற்பாடு செய்வார்கள் என்பதோடு பி.சி.சி.ஐ ஒரு மத்திய மருத்துவ குழுவை ஏற்பாடு செய்யும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் தரையிறங்கியதும், சோதனையின் பொறுப்பு உரிமையாளர்களிடமே இருக்கும், அவர்கள் பி.சி.சி.ஐயின் மருத்துவக் குழுவுடன் 24×7 அடிப்படையில் ஒருங்கிணையா வேண்டும். ஒவ்வொரு உரிமையாளரின் மருத்துவக் குழுவும் அந்தந்த அணிகளுடன் பாதுகாப்பு குமிழியில் தங்கியிருக்கும்.
- வீரரை மாற்றுதல் மற்றும் கடன் வழங்குதல்: வீரர்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது மற்றும் கடைசி நிமிட பயணங்களைத் தவிர்ப்பதற்காக உரிமையாளர்கள் கூடுதல் வீரர்களுடன் பயணிக்க சுதந்திரமாக இருப்பார்கள் எனவும் தெரிகிறது .
அறியப்பட்ட தகவல்களின் படி, ஐ.பி.எல் அணிகள் ஒவ்வொன்றுக்கும் தமது குழுவினரை 20 வீரர்களாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தயாராகும் பிரதேசத்தில் மிக்க குறைந்த சனத்தை பேண வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. எது எவ்வாறாயினும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்ற முடிவில் அணிகள் திண்ணமாக இருப்பது தெரிகிறது அணியின் வலிமையில் திசை மாறல்கள் இருக்குமாக இருந்தால், உரிமையாளர்கள் தங்கள் விளையாடாத ஊழியர்களை கத்தரிக்க விரும்புகிறார்கள். “சில உரிமையாளர்கள் இந்த முடிவை பயிற்சியாளர் மற்றும் குழு நிர்வாகத்திடம் விட்டு விடுவார்கள்.ஆனால் நியமப்படி , ஒரு வீரர் இருந்தால், அவர் தனது ஒட்டுமொத்த பரிவாரங்களுடன் இருக்க வேண்டும். அதுவே அணிக்கு உறுதியை அளிக்கும்” என ஒரு ஐ.பி.எல் குழாம் மூத்த அதிகாரி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
“போட்டி தினங்களில் அரங்கத்துக்குள் உள்நுழையம் ஒவ்வொருவரிடமும் பொறுப்பு நிறைந்திருக்கும். அவர்கள் பற்றிய எண்ணிக்கை அதிகமாக கருத்தில் கொள்ளப்படும். இதனால் சில உதவி ஊழியர்கள் கூட அறையிலேயே தங்க வைக்கப்பட வாய்ப்புண்டு ” என அவர் மேலும் தெரிவித்தார்.
வலைப்பயிற்சி பந்து வீச்சு வீரர்கள் மற்றும் ஏனைய பயிற்சி வளங்கள் சவால்
அணிக் குழாம்களுடைய அடுத்த கவனத்துக்குரிய கருத்து சரியான மற்றும் நிறைவான பயிற்சி வளங்களை ஏற்ப்படுத்திக் கொடுப்பது. இவ்வளவு கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்போது, இதற்கு முன்னைய முறைகள் போல பயிற்சி ஏற்பாடுகள் இலகுவாக இருக்கப்போவதில்லை என்ற கவலை வெளியிடப்படுகிறது. “அதனால்தான் அணிகள் தமது குழாமில் அதிகளவு வீரர்களை வைத்துக் கொள்ள விரும்புகின்றன. ஒவ்வொரு குழாமும் குறைந்தது இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்க உள்ளதனால் அத்தனை அணிகளுக்கும் வலைப்பயிற்சி பந்து வீச்சு வீரர்களைப் பெறுவது என்பது கடினமான விடயம்” என அந்த அதிகாரி தெரிவித்தார்.
சி .எஸ்.கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி மற்றவர்களை விட முன்னமே புறப்படத் திட்டமிடுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டுபாய் மண்ணில் எதிர்வரும் ஆகஸ்டு 10ஆம் திகதி தரையிறங்க திட்டமிட்டு அதற்காக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திப் பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டதன் படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகஸ்டு 19-20 திகதிகளையும் , ஏனைய அனைத்து அணிகளும் ஆகஸ்டு 25 திகதியிலும் புறப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சி .எஸ்.கே முன்னாயத்தகரமாக நடந்து வருகிறது. அவர்கள் வீரர்களை ஆகஸ்டு 10 ஆம் திகதி புறப்படத் தயாராக இருக்குமாறு அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் பீ.சி.சி.ஐ யினால் தாமதப்படுத்தப்பட்டு வரும் நியம இயக்க நடைமுறைகள் காரணமாக இந்தத் திட்டமும் தாமதமாகலாம்” என ஒரு தகவல் ஆதாரம் மூலமாக தெரிய வருகிறது.
இந்திய அரசாங்கம் திருப்பி அனுப்பும் விமானங்களை மட்டுமே இப்போது அனுமதிப்பதால், பி.சி.சி.ஐ ஆனது வீரர்களை அழைத்துச் செல்ல எமிரேட்ஸ் விமான சேவையுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் ஒரு சில உரிமையாளர்கள் ஏற்கனவே பட்டய விமானங்களை ஏற்பாடு செய்வதைப் பற்றி ஆய்ந்து பார்க்கிறார்கள், “என்று அந்த தகவல் ஆதாரம் மூலம் மேலும் தெரிய வந்தது .
இது போன்ற வேறுபட்ட கட்டுரைகளுக்கு எமது விளையாட்டுப் பக்கத்தை நாடுங்கள்