தோனி எப்படி இவரது கிரிக்கெட் பயணம் ஆரம்பித்தது?
1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி, சிறு வயதில் இருந்தே அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பேட்மிண்டன்.
தோனி கல்வி கற்ற கல்லூரியில் ஒரு நாள் கல்லூரி அணியில் விக்கெட் கீப்பர் சுகயீனம் காரணமாக வராததால் அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார். அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை.
கல்லூரியில் விளையாடும் போது தோனியின் பேட்டிங்கிற்கு பல ரசிகர்கள் உண்டு.மிகவும் சாதாரணமான வாழ்க்கையில் பிறந்து வளர்ந்த தோனிக்கு கிரிக்கெட் வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை.
பல சிரமங்களுக்கு மத்தியில் 2004 ல் இந்தியாவுக்காக தனது முதல் போட்டியில் தோனியால் விளையாட முடிந்தது.அந்த நேரத்தில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த சச்சின் டெண்டுல்கருக்கும், தோனிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறந்த வீரர்களாக கருதப்படும் இவர்கள் இருவரும் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
2004 இல் நடந்த தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் தோனி வெளியேறினார்.ஆனாலும் இவர் மீது நம்பிக்கை வைத்த இந்திய அணித்தலைவர் கங்குலி வாய்ப்புகளை வழங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார்.
அதே ஆண்டில் இலங்கையுடன் நடந்த போட்டியில் 183 ரன்களை எடுத்த தோனி அணியில் தனது இடத்தை மேலும் வலுவாக்கினார்.
ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, 2007 உலக கோப்பை காலகட்டத்தில் தோனி உள்பட பல இந்திய வீரர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடரில், டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாடாத நிலையில், இளம் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றது தோனிக்கு அதிக பாராட்டுகளை பெற்றுத் தந்தது.
2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. அவரது தலைமைக்குப் பாராட்டுகளை தந்தது.
2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.2010 மற்றும் 2016 ஆகிய இருமுறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில் தான். உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஐபிஎல் தொடர்களிலும் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வெகுவாக புகழப்பட்டது.
2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெற போவதாக தோனி அறிவித்தார்.
மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து, இந்திய அணிக்கு தலைமையேற்று பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் பல பரிணாமங்களில் முத்திரை பதித்துள்ள தோனியின் பேட்டிங், தலைமை பண்பு மற்றும் அதிரடி ஷாட்கள் போன்றவை ரசிகர்களின் மனதில் இன்னும் இடம்பிடித்து உள்ளன.
குறிப்பாக 2019 ஐசிசி உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியுற்று இந்தியா வெளியேறிய சூழலில், அதற்கு பிறகு நடந்த எந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் தோனி அணியில் இடம்பெறவில்லை.அவர் ஓய்வு பெறப் போகிறார் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்தாலும், ஒய்வு பெறுவது குறித்து தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்,
- இறுதி ஓவர்களில் அற்புதமாக விளையாடிப் பல போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர்,
- 2 உலக கோப்பைகளை வென்ற இந்திய அணிகளுக்கு தலைமை தாங்கியவர்
- தான் அறிமுகமான 23 வயதில் விரைவாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடிய தோனி, தற்போதும் அதே வேகத்துடன் ஓடுகிறார்.
- அதே அதிரடி ஷாட், அதே சிக்ஸர்கள், அதே தோனிதான்.
- மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவராக அணியினரை வழிநடத்துகிறார். என அவர் ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தோனி மிகவும் நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற தோனி இம்முறையும் அவ்வாறு வெல்வார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி.
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு
Wall image source:https://writeangletriangle.wordpress.com/2017/07/07/msdhoni/