ஃபார்முலா ஒன்னில் தனது 100 வது முன்னிலை ஆரம்பத்தை லூயிஸ் ஹாமில்டன் கடந்த சனிக்கிழமை பெற்றார். ஞாயிற்றுக்கிழமை ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக் பந்தயத்தில் ஆரம்ப இடத்தை பெற்றதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக , இம்மைல்கல்லை எட்டிய சாதனையாளராக நடப்பு உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் ஆனார்.
ஃபார்முலா ஒன் பந்தயங்களில் ஓட்டம் தொடங்க முன் பந்தயக் கார்களை அணிவகுக்க முதல் நாளில் தகுதிகாண் சுற்றுகள் நடைபெறும். அப்போட்டியில், எந்த வீரர் மிகக் குறைந்த நேரத்தில் தடத்தை சுற்றி வருகிறாரோ, அவர் அணிவகுப்பில் முதல் இடம் பெறுவார். இது போல் நிலை என அழைக்கப்படும். வருடம் தோறும் போட்டிகள் வித்தியாசமான இடங்களில் நடைபெறுவதால் இதனைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல, அதுவும் ஒரு செக்கனின் சிறிய பிரிவுகளிலேயே வெற்றி கிடைக்கும். அதனை 100 முறை செய்துள்ளார் லூயிஸ் ஹாமில்டன்.
லூயிஸ் ஹாமில்டன் பிரதிபலிப்பு
ஹாமில்டன் சாதனைகளை படைப்பதை நோக்கமாக கொண்டதில்லை, ஆனால் அவர் தனது காக்பிட்டில் இருந்து எழுந்து கொண்டாடியதிலிருந்து இந்த நிகழ்வு தனித்துவமானது என்பது தெளிவாக இருந்தது. குறைபாடற்ற முறையில், அவர் சர்க்யூட் டி பார்சிலோனா-கேடலூனியாவில் (ஸ்பெய்ன் சுற்றுப்பாதை) ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை ஒரு நொடியின் முன்னூறு பாகங்களால் முந்தி (0.03) இரண்டாவது இடத்துக்கு தள்ளினார்.
36 வயதான பிரிட்டன் நாட்டவர் லூயிஸுக்கு இப்போது எஃப் 1 இல் அவரது 15 வது சீசனில் இது ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது. 2007 ஆம் ஆண்டில் தனது முதல் பருவத்தில் கனடிய ஜி.பி.யில் மெக்லாரனுக்காக 22 வயதாக இருந்தபோது தனது முதல் போல் இடத்தை எடுத்தார்.
“2007 ஆம் ஆண்டில் இது சிறப்பு வாய்ந்தது, அப்போது நான் செய்ததை அங்கு என்னால் செய்ய முடிந்தது என்பது ஆச்சரியமாக இருந்தது. இங்கே நாங்கள் 100 போல் நிலைகளின் பின்னர் இணைந்திருக்கிறோம், அந்த நினைவுகள் இன்னும் இளமையாக உணர்கிறது, தொடர்ந்து செல்வது எனக்கு நன்றாக இருக்கிறது, ”என்று அவர் கூறினார். “100 என்பது நம்பமுடியாதது, ஆனால் இது முதல் ஒன்றாகும். இதனை உணர எவ்வளவு நாள் போகும் என தெரியவில்லை, இது இவ்வளவு பெரிய எண். இது எவ்வளவு அபூர்வமானது, எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது கடினம்.”
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்
எம்மை பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்