யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
யூரோ கால்பந்து தொடரில் இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்றும் அரை நூற்றாண்டுக்கு பின்னர் அந்த அணி மீண்டும் யூரோ கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1968ஆம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணி, 53 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணி
விளையாட்டு செய்திகளை வாசிக்க இங்கே உள்ள பொத்தானை அழுத்தவும்