இங்கிலாந்து கிரிக்கெட் சபை முதன்முறையாக நடத்திய 100 பந்துகள் கொண்ட புதுவகையான கிரிக்கெட் தொடரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் ஆண்கள் பிரிவில் சௌத்தர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானான மஹேல ஜயவர்தன பயிற்சியாளராக செயற்பட்டமை விசேட அம்சமாகும்.
அதன்படி, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சௌத்தர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்டுக்களால் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சௌத்தர்ன் பிரேவ் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்
கொண்டது.
இதனையடுத்து வெற்றி இலக்கைத் துரத்திய பெர்மிங்காம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள சௌத்தர்ன் பிரேவ் அணி 32 ஓட்டங்களால் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.