ஆப்கான் உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிபட தெரிவிப்பு.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு
அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் தயாராக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டி-20 உலககிண்ணப் போட்டியில் நிச்சியமாக பங்கேற்போம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் ஹிக்மாட் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹிக்மாட் ஹசன் கூறியுள்ளதாவது.
நாங்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவோம் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் சில நாட்களில் உலகக் கிண்ணத்துக்கான அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் காபூல் நகருக்கு பயிற்சி மேற்கொள்ள வருவார்கள்.
அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் இணைந்து விளையாட இருக்கும் முத்தரப்பு டி20 தொடரை நடத்துவதற்கான இடத்தை பார்த்துகொண்டிருகின்றோம். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுடன் பேசிக்கொண்டிருகின்றோம்.
ஹம்பாந்தோட்டையில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கின்றோம்.அதன்பின் உள்ளூர் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளோம்.
உலககோப்பைக்கு தயார்படுத்த இந்தத் தொடர்கள் எமக்கு பலமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் சுட்டிக் காட்டும் அந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்கள்