சென்னை ரசிகர்களுக்கான வித்தியாசமான முறையில் சோகமான தொடராக இந்த சீசன் ஐ.பி.எல் அமைந்துள்ளது. சென்னை அணியை அணிகள் பட்டியலின் கடைசி இடத்தில் பார்ப்பது மனதுக்கு வேதனை அளிக்கும் விடயமாக உள்ளது. இருப்பினும் என்றும் மனம் தளராமல் கூட நிற்கும் CSK அணியின் ரசிகர்களுக்கு இன்றைய தினம் சென்னை அணி மகிழ்ச்சியை அளிக்குமா என்பது கேள்வி. சென்னை அணியின் இன்றைய வெற்றியில் தாக்கம் செலுத்தப்போகும் காரணங்கள் பற்றிய ஐ.பி.எல் அதிகாரபூர்வ வலைத்தளத்தின் ஆய்வினை நாம் உங்களுக்காக தமிழ் வடிவத்தில் வழங்குகின்றோம்.
இந்தக் கட்டுரையில் இரண்டு அணிகளதும் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வதோடு போட்டிக்கான திருப்பு முனையாக அமையும் விடயங்களையும் உங்களுக்காக தருகிறோம்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ட்ரீம் 11 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 இன் போட்டி 14 ஐ நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (SRH) வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.
CSK ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்படுகிறது. மேலும் வெற்றிகரமான திரும்பலை மேற்கொள்ளும் என்று நம்புகிறது. சீசன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் CSK தங்கள் ஐபிஎல் 2020 ஐ வெற்றிகரமாக ஆரம்பித்தாலும், அவர்கள் அடுத்த இரண்டு ஆட்டங்களை ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) க்கு எதிராக இழந்தனர்.
டேவிட் வார்னர் தலைமையிலான SRH அணி பற்றிப் பார்க்கையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகியவற்றுக்கு எதிராக தோல்வியடைந்ததால், அவர்கள் இந்த சீசனில் உறுதியான தொடக்கத்தை அனுபவிக்கவில்லை. ஆனால் SRH இரண்டு போட்டிகளின் தோல்வியை தனது மூன்றாவது போட்டியில் மாற்றியமைத்தது. போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் DCயை வீழ்த்தியது.
இரு அணிகளும் சீசனின் இரண்டாவது வெற்றியை நாடுகையில்,CSK எதிர் SRH மோதல் பலரது எதிர்பார்ப்புகளுக்கும் இணைய பதிவுகளுக்கும் விருந்தாக அமையும் என்று உறுதியளிக்கிறது. போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடிய ஐ.பி.எல். அதிகார பூர்வ வலைத்தளத்தின் தேர்வுகள் இதோ.
CSK
அம்பதி ராயுடு
இன்றைய போட்டியில் மீள வர தயாராக இருக்கிறார் அம்பத்தி ராயுடு. அவர் தனது ஐபிஎல் 2020 போட்டிகளை தனது பாணியில் ஆரம்பித்தார்,MIக்கு எதிராக 48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடும் பதினொரு பேர் கொண்ட அணியில் இடம்பெற முடியாததால் அவரது அணி மிடில் ஆர்டரில் உறுதியான ஒருவர் இல்லாமல் தத்தளித்தது. சிஎஸ்கே எப்படியாவது இன்னொரு வெற்றியைப் பதிவுசெய்ய விரும்புவதால், அம்பதி ராயுடு கிடைப்பது CSKவுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும்.
ஃபாஃப் டு பிளெசிஸ்
மூன்று ஆட்டங்கள், இரண்டு ஐம்பது +ஓட்டங்கள் மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் 43 ஓட்டங்கள். ஃபாஃப் டு பிளெசிஸ் இதுவரை மூன்று சிஎஸ்கே ஆட்டங்களிலும் துடுப்பாட்டம் மூலம் சிறப்பாக செயல்பட்டார். மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்துப் போராடும் இப்போட்டியில் சிஎஸ்கேவின் இந்த வலதுகை வீரர் வெற்றிக்கு முக்கியமான காரணியாக களத்தடுப்பிலும் இருப்பார்.
தீபக் சாஹர்
தீபக் சாஹர் தனது ஓவர்களில் பெரும்பகுதியை பவர் பிளேயில் வீசுகிறார், மேலும் அவர் இதுவரை தனது ஓவர்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் CSK அணிக்கான வலது கையாக பந்து வீச்சில் இருப்பார். இருப்பினும், வார்னர், பேர்ஸ்டோவ் மற்றும் வில்லியம்சன் / மனிஷ் பாண்டே ஆகியோரைக் கொண்ட SRH அணியின் பலம் வாய்ந்த ஆரம்ப வீரர்களை எதிர் கொள்ளும் சவால் அவருக்கானது.
SRH
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கேப்டன் முதல் இரண்டு ஆட்டங்களில் SRH விளையாடும் பதினொரு பேர் பட்டியலில் இருக்கவில்லை, ஆனால் அவர் தேர்வு செய்யப்பட்டவுடன், கேன் வில்லியம்சன் DCக்கு எதிராக 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது தேவையை அணிக்கு காட்டினார். வலது கை வீரர் வார்னர் அல்லது பெர்ஸ்டோ போன்ற பலமான அடித்து ஆடும் விளையாட்டை அவர் வெளிக்காட்டவில்லை, ஆனால் இடைவெளிகளைக் கண்டறிந்து ஓட்டங்களை எழுப்பும் மந்திரக் காலை தெரிந்த அவர் மிகவும் சூட்சுமமானவர்.
ரஷீத் கான்
தனது சொந்த தரத்தின்படி, ரஷீத் கான் RCB மற்றும் KKR அணிகளுக்கு எதிராக சிறந்து பந்து வீச்சு பெறுதிகளைப் பெறவில்லை. இருப்பினும், SRH லெக் ஸ்பின்னரான இவர் DC க்கு எதிரான போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தோனிக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு ஆயுதமாக இவர் இருப்பார்.
டி நடராஜன்
DC க்கு எதிராக அவர் அந்த யார்க்கர்களை எப்படிக் கையாண்டார் என்பதைப் பார்ப்பது கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதுவரை மூன்று SRH ஆட்டங்களிலும் இடம்பெற்றுள்ள டி நடராஜன், வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். SRH எடுத்த 162 ரன்கள் என்ற சிறிய ஓட்ட எண்ணிக்கையை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும்அணிக்கு எதிராக பாதுகாத்தார். இந்த் இடது கை பந்து வீச்சாளர் இந்த ஆட்டத்திலும் சாதிப்பார் என அணி எதிர்பார்க்கலாம்.
புள்ளிவிவரங்கள்
டுபாயில் போட்டிகள்
- இந்த இடத்தில் சி.எஸ்.கே: விளையாடியது 3, வென்றது 2, இழந்தது 1
- இந்த இடத்தில் எஸ்.ஆர்.எச்: விளையாடியது 3, வென்றது 2, இழந்தது 1
கடந்த ஆண்டு சென்னை எதிர் ஹைதராபாத் :
- CSK 132/5 : SRH 137/4 (SRH 6 விக்கெட்டுக்களால் வென்றது )
- CSK 176/4 : SRH 175/3 (CSK 6 விக்கெட்டுக்களால் வென்றது )
இந்தப் போட்டியில் காத்திருக்கும் மைல்கற்கள்
- 4500 ஐபிஎல் ரன்களை முடிக்க எம்எஸ் தோனிக்கு 24 ரன்கள் தேவை.
- சிஎஸ்கேவுக்காக 1000 ஐபிஎல் ரன்களை முடிக்க அம்பதி ராயுடுவுக்கு 45 ரன்கள் தேவை.
- 3000 ஐபிஎல் ரன்களை முடிக்க மனிஷ் பாண்டேக்கு 69 ரன்கள் தேவை
- சி.எஸ்.கே-க்கு எதிராக 500 ஐ.பி.எல் ரன்களையும், ஒட்டுமொத்தமாக 3500 ஐ.பி.எல் ரன்களையும் முடிக்க டேவிட் வார்னருக்கு முறையே 55 மற்றும் 142 ரன்கள் தேவை.
எது எவ்வாறாக இருப்பினும் சென்னை அணி ரசிகர்களுக்கு இது ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டி. ஏனைய அணிகளின் ரசிகர்களால் ஏற்கனவே பல கேலிகளுக்கு ஆளாகி அவற்றை எதிர்த்துப் போராடி வரும் சென்னை ரசிகர்களின் பக்கம் ஒரு பக்கப்பலமாக இந்தப் போட்டி அமையும் என எதிர்பார்ப்போம்.