இலங்கை வீரர்களின் வருகை பெங்களூர் அணிக்கு புதிய பரிணாமத்தையும் பலத்தையும் தருவதாக அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மாற்று வீரர்களாக சிலர்
சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன்,சம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.
அவர்களுக் பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீரா இலங்கையில் அதிகளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.
அங்குள்ள ஆடுகளங்களும் எமிரேட்ஸில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாக உணர்கிறோம்.
புதிய வீரர்கள் வருகை எங்களுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. முதல்பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை மன உறுதியுடன் இரண்டாவது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம் என்று பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.