இந்தியா – இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடையும் வாய்ப்பை நோக்கி நகர்ந்து வருகின்றது. நேற்று மதிய போசன இடைவேளை வரை.
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.1-1 என்று தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில் நான்காவது போட்டி கடந்த வியாழக்கிழமை லண்டன் ஓவலில் தொடங்கியது.
முதல் இனிங்ஸில் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.பதிலுக்கு முதல் இனிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த நிலையில் இரண்டாவது இனிங்ஸில் இந்திய அணி 466 ஓட்டங்களை குவித்தது இதில்,ரோஹித் சர்மா 127, புஜாரா 61, தாகூர் 60, ரிஷப் பந்த் 50 ஓட்டங்களை சேர்த்திருந்தனர்.
இங்கிலாந்தின் பந்துவீச்சில் வோக்ஸ் 3 விக்கெட்களையும்,ரொபின்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
368 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 77 ஒட்டங்களை அந்த அணி பெற்றிருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
இறுதி நாளான நேற்று ஆட்டம் தொடர்ந்த நிலையில், ரொறிபேர்ண்ஸ் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
நேற்று மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்பட்ட போது இங்கிலாந்து அணி 2 விக் கெட்கள் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹமீத் 62, ரூட் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.