இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் சொந்த நாட்டில் 498 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ள நிலையில், ஜேம்ஸ் அண்டர்சன் சொந்த நாட்டில் 400 விக்கெட்டுகளுடன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது
டெஸ்ட் லீட்ஸ் நெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை 4 ஆவது ஆட்டத்திலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் இனிங்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்டும், 2 ஆவது இனிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 630 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சனிக்கிழமை 28-08-21 2 ஆவது இனிங்சில் ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை பதிவு செய்துள்ளார்
94 டெஸ்ட் போட்டியில் 179 இனிங்சில் 3408.3 ஓவர்கள் வீசி 9,610 ஓட்டங்கள் கொடுத்து இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதில் 42 ஓட்டங்கள் கொடுத்து 07 விக்கெட் வீழ்த்தியது ஒரு இனிங்சில் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் இரு இனிங்சிலும் 71 ஓட்டங்கள் கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தியது. அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
இதற்கு முன் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சொந்த நாட்டில் 493 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அதன்பின் சொந்த நாட்டில் 400 விக்கெட்டை தாண்டிய ஒரே பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தான்.முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.