இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்
நீண்ட கால தாமதத்திற்கு பிறகு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் அனைத்து பயனர்களுக்கும் டாக் மோட் அதாவது கருப்பு நிறத்திலான பின்னணி கருப்பு நிறத்திலான பயன் முகப்பு போன்ற விடயங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒருவேளை நீங்கள் அன்றொஇட் 10 அல்லது iOS 13 பயனராக இருந்தால் உங்கள் போன் செட்டிங்ஸ் இல் உள்ள டாக் மோட்டை இயக்கினாலே வாட்ஸ் அப்பில் உள்ள டாக் மோட் தானாக இயக்கப்படும் என்பதையும் இந்த அம்சத்தை நீங்கள் மேனுவல் ஆக மாற்றலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை நீங்கள் அன்றோய்டு 9 அல்லது அதற்கு கீழே உள்ள இயங்குதளங்களை பாவிப்பார்கள் ஆக இருந்தால் பின்வரும் எளிமையான முறைகளை பின்பற்றவும்.
சமீபத்திய version இற்கு வாட்ஸ் அப்பை அப்டேட் செய்த பிறகு வாட்ஸ் அப்பை திறக்கவும். இப்பொழுது செட்டிங்ஸ்க்கு சென்று அதனைத் தொடர்ந்து Chats என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் theme என்னும் விருப்பத்தை காண்பீர்கள் அதை கிளிக் செய்யவும் அந்த மெனுவில் இருந்து டாக் என்பதை தேர்ந்தெடுத்து ஓகே என்பதை கிளிக் செய்யவும் அவ்வளவுதான்.
வட்சப் நிறுவனமானது “ஒரு பழக்கமான அனுபவத்தின் கீழ் புதிய தோற்றத்தை அளிக்கிறது இது குறைந்த ஒளி சூழலில் கண்களுக்கு அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.
ப்ளே ஸ்டோர் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் இந்த டார்க் மோட் அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய தொலைபேசி ஆனது உங்கள் கண்களை கூசாத வகையிலே கருப்பு நிறத்திலான தோற்றத்தில் மிகவும் அழகான தளமாக நீங்கள் பேசுவதற்கு தயாராகிவிட்டது.
image source:https://in.mashable.com/tech/4340/heres-how-to-enable-whatsapp-dark-mode-in-android-and-ios