கொரோனா தொற்றை தடுக்க அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமா?
அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. நன்கு வேகவைத்து சாப்பிடலாம்.
கொரோனா சளி, காய்ச்சலுக்கான வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது?
வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். சிலருக்கு எந்தவிதமான அறிகுறியும் காட்டாமலே கொரோனா வரலாம்;.
சளித்தொல்லை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டுமா?
சாதாரண சளித் தொந்தரவாக இருந்தால் அவசியமில்லை. காய்ச்சல், மூச்சுவிடுவதற்கு சிரமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனே மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது.
நெரிசல் அதிகமான இடங்கள் அல்லது பயணத்தின்போது வைரஸ் பரவுமா?
பயணங்களின்போது கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்வது அவசியம். வாகனத்தைவிட்டு இறங்கியவுடனே
கைகளை சானிடைசரால் சுத்தப்படுத்தி கொள்வது நல்லது.
தொற்று ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரியான வைட்டமின் ‘சி” நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
அறிகுறிகளே தெரியாத கொரோனா நோயாளியிடம் இருந்துகூட, கொரோனா பரவுமா?
அறிகுறிகளே தெரியாத கொரோனா நோயாளியிடம் இருந்து பரவ வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், அறிகுறிகள்
தெரியத் தொடங்கிய பின்னர்தான் நோய் தீவிரமாக பரவுகிறது.
பூண்டு சாப்பிட்டால், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாமா?
பூண்டுக்கு, நுண்ணுயிர்களை கொல்லும் தன்மை உண்டு. ஆகவே, கொரோனா வைரஸையும் அது கொல்லும் என
எதிர்பார்க்கப்படுகிறதே தவிர, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ரூபாய் நோட்டுகள், சில்லறைக் காசுகள், ஏ.டி.எம் கார்டுகள் மூலம் கொரோனா பரவுமா?
கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், இப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சாதாரண சளி, காய்ச்சலுக்கும், கொரோனாவுக்கு என்ன வேறுபாடு?
இரண்டும் வேறு வைரஸ் குடும்பத்தை சேர்ந்தவை. எனினும், இரண்டுக்குமே அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான்
இருக்கும். பரிசோதனைகளின் மூலமாகத்தான் இரண்டையும் பிரித்துக்கூற முடியும்.
கொரோனாவை அழிக்க என்ன வகை கிருமிநாசினிகளை உபயோகிக்க வேண்டும்?
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சோப் அல்லது டிடெர்ஜென்டை நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
தொடர்ந்து, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கிருமிநாசினியை நீரில் கலந்து, அதன்மூலம் தரையை சுத்தப்படுத்தும்போது, கையுறைகள் அணிவது கட்டாயம்.
மாஸ்க் இல்லாதபட்சத்தில் கைக்குட்டைகளை பயன்படுத்தலாமா?
கைக்குட்டைகளை பயன்படுத்தலாம். ஆனால், தினமும் ஒன்று என பயன்படுத்த வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுடன் நேரடி தொடர்பில் இருக்கலாமா?
முன்புபோல வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கால்நடைகளிடம் நெருக்கம் காட்ட வேண்டாம்.
அப்படியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் மாஸ்க் போட்டுக்கொண்டு செல்லுங்கள்.