கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
கழுகை கனவில் கண்டால் என்ன பலன்? கழுகை கனவில் கண்டால் பயணம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

கொத்தமல்லியை கனவில் கண்டால் என்ன பலன்? கொத்தமல்லியை கனவில் கண்டால் நோய்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

முடி வெட்டிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

புதிய மனை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் திருமணம் தொடர்பான சுபச்செய்திகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

மயில் இறகை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
![உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 67 5 Free download Feather Wallpapers HD Wallpapers Pictures Images Backgrounds [1500x997] for your Desktop, Mobile & Tablet | Explore 42+ Feather Wallpaper | Peacock Wallpaper, Peacock Feather Wallpaper, Serena and Lily Wallpaper](https://cdn.wallpapersafari.com/69/76/lpLODC.jpg)
மலை மேல் அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த துறையில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

சலவை இயந்திரத்தை கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

சீரடி சாய் பாபாவை கனவில் கண்டால் என்ன பலன்? சீரடி சாய் பாபாவை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

தொட்டியில் மீன்கள் நீந்தி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் காரிய சித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
கோழி பிரியாணி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுப காரியம் நடக்க போகின்றது என்பதைக் குறிக்கின்றது.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்
