கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
முடி கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முடி கொட்டுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
முயல் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நண்பர்களிடம் உரையாடும்போது சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மார்பில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்பில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.
ருத்ராட்சத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ருத்ராட்சத்தை கனவில் கண்டால் மகான்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? யானை துரத்துவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளிடத்தில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இடது கண் துடிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு விரும்பாத செயல்கள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.
குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தையை கனவில் கண்டால் இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
மக்கள் கூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுயதொழிலில் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்