மூளைப் பயிற்சியாளர் Jim Kwik, மூளைச்செயற்பாட்டை விருத்தி செய்யும் தந்திரங்கள் சிலவற்றை பகிர்ந்து SpaceX நிறுவன உரிமையாளரான Elon Musk மற்றும் அவரது குழுவுடன் செயலாற்றி உள்ளார். அவர்கள் “Lord of the Rings” மற்றும் Isaac Asimov’s “Foundation Series” முதலான புத்தகங்களுடன் பிணைந்து இருந்த வேளையில் தன்னை அழைத்ததாக கூறுகிறார்.
CNBC Make It பக்கத்துக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போது, “சிறந்த தலைவர்கள் எல்லாம் வாசிப்பாளர்கள் என நினைக்கிறேன்” என்றார்.
Kwik செய்கின்ற செயல்கள்: எவ்வாறு வேகமாக வாசிப்பது என்பது தொடக்கம் நினைவை அதிகரிக்க மற்றும் கல்வியை ஆர்முடுக்குவது வரையும், அறிந்து கொண்ட எலோன், Kwik ஐ தன்னிடம் அழைத்துக் கொண்டுள்ளார்.
“அவர் என்னை அழைத்தது, உலகில் உள்ள வெற்றிகரமான நபர்கள் எல்லாம் வெற்றிகரமாக இருப்பதற்கு தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததால் தான்.” என்கிறார் Kwik.
இந்த உலகிலேயே சிறந்த திறமை, வாழ்க்கை முழுதும் கற்பதுதான். பில்லியனர் மார்க் க்யூபன்
Musk, கவிக் கற்றுக்கொடுக்க வந்த வித்தைகளில் பலவற்றை ஏற்கனவே தன்வசப்படுத்தி இருந்திருக்கிறார். அவர் Kwik ஐ அழைத்தது, தனது SpaceX இல் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தனது தந்திரங்களை சொல்லிகொடுக்கவே.
(Musk கருத்துப்படி, Kwikனுடைய யோசனைகள் உணர்ச்சிகரமனாவை, ஆனால் அவர் என்னுடையதோ, அல்லது SpaceXனுடையதோ மூளைப் பயிற்சியாளர் அல்ல என்கிறார்.)
“Limitless: Upgrade your brain, learn anything faster, and unlock your exceptional life.” எனப்படும் புத்தகத்தில் Kwik தற்பொழுது தன்னுடைய தந்திரங்கள் எல்லாவற்றையும் எழுதியுள்ளார்.
ஒட்டு மொத்த உலகமும் பொருளாதார ரீதியாக சிதைந்து, சந்தைகள் சரிந்து போய் இருக்கும் இந்தக்காலத்தில் ஒவ்வொருவரும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு தம்மை நிலைப்படுத்த இந்த புத்தகம் உதவுமென்கிறார் கவிக்.
மக்களால் அதனைச் செய்ய முடியும். ஆனால் பாடசாலைக் காலங்களில் அவர்கள் எப்படி சரியான முறையில் கற்பது என்பது பற்றி அறிவுறுத்தப்படவில்லை. அதனாலேயே இன்றும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர்.
Kwikஆல் உருவாக்கப்பட்ட Kwik Learning நிறுவனமானது, இரண்டு தசாப்தங்களாக இணையும் மூலம் இந்த தந்திரங்கள் பற்றி கற்பித்தும், நிறுவன உரைகளில் சொற்பொழிவுகளை நடாத்தியும் வருகிறது,
“Limitless” எனும் நூலில் மூன்று பகுதி சட்டகத்தினூடாக வேகமாக கற்பதற்கான தந்திரங்கள் பற்றி கற்பிக்கிறது. இது
- மனநிலை – உங்கள் நம்பிக்கைகள்
- ஊக்கம் – உங்களுக்கான காரணம்
- முறை – உங்கள் கனவுகளை அடையும் செயன்முறை
ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.
அவற்றில் 3 தந்திரங்கள் இதோ..
உங்கள் ANT களைக் கொல்லுங்கள்
(மனநிலை)
கவிக் கருத்துப்படி, உங்களால் புதிதாக எதையும் கற்க முடியாது என சொல்கின்ற (ANT) தன்னிச்சையான எதிர்மறை எண்ணங்களை நீங்கள் முகங்கொள்ள வேண்டும்.
“என்னால் இதை செய்ய முடியாது என்றோ, இதை செய்வதற்கு எனக்கு வயது போய்விட்டது என்றோ, இதனை செய்யும் அளவு எனக்கு திறமையில்லை என்றோ, நீங்கள் உங்களுக்கு சொல்லச் சொல்ல உங்களால் அதனை செய்ய முடியாது போகிறது” என்கிறார் Kwik.
இவ்வாறான எண்ணங்களை அழிக்க, அவற்றுக்கு மறுபதிலளிக்க பழக வேண்டும். உதாரணமாக உங்களால் குறியீட்டு மொழி கற்க முடியாது என ஒரு எண்ணம் உருவானால் “இல்லை என்னால் முடியும்” எனப் பேசுங்கள்.
“உங்கள் மூளைக்குள் எது பொருந்துமோ அதற்கேற்ப உங்கள் மூளையை சிறிதாக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் மூளைக்குள் எதை கொண்டு வர முடியுமோ அதற்கேற்ப மூளையைப் பெருப்பியுங்கள்.”
மூளை உணவுகளை உட்கொள்ளுங்கள்
(ஊக்கம்)
நீங்கள் உண்ணும் உணவு கருத்திலெடுக்கப்பட வேண்டும் என்கிறார் கவிக். அதுவும் முக்கியமாக உங்கள் பார்த்தல், கேட்டல், நினைவு மற்றும் முடிவெடுத்தல் ஆகியனவற்றைக் கட்டுப்படுத்தும் தசைக்கட்டுப்பாடு மற்றும் உணர்திறன் முன்னுரிமைப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான வெண்சடப்பொருள் தொடர்பாக கவனிக்கும்போது மிக முக்கியம் என்கிறார். ஆகவே மூளை உணவுகளை தினமும் ஒரு முறையேனும் எடுக்குமாறு கூறுகிறார்.
Kwik கருத்துப்படி, அவற்றின் டாப் 10 இதோ…
- அவகாடோ : இவற்றில் உள்ள தனி நிறைவுறாக் கொழுப்பு உங்கள் குருதியோட்டத்தை அதிகரிக்கும்
- நீலபெரிக்கள் : இவை உங்கள் உடலில் ஒக்சியேற்ற அழுத்தத்தை குறைப்பதோடு மூளை வயதாவதையும் தடுக்கின்றது.
- ப்ரோக்கோலி : இது சிறந்த விட்டமின் K வழங்கி என்பதோடு அறிவாற்றலையும் நினைவுத் திறனையும் விருத்தி செய்யும்.
- முட்டை : மூளைக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் பலவற்றோடு மூளைக்கு தேவையான Choline எனும் சத்தையும் கொண்டுள்ளது.
- பச்சிலைக் காய்கறிகள் : விட்டமின் E நிறைந்த இவை உங்கள் மூளை வயதாவதவை குறைக்கும்.
- சாலமன், மத்தி, கேவியர் மீன்கள் – இவற்றில் உள்ள ஒமேகா 3 அத்தியாவசிய கொழுப்பமிலங்கள் மூளை வயதாவதைக் குறைக்க உதவலாம்.
- மஞ்சள் : இது வீக்கங்களைக் கட்டுப்படுத்தி, எதிரொட்சைட்டுக்களைத் தூண்டி மூளைக்கு ஒட்சிசன் செல்ல உதவும்.
- வாதுமைக் கொட்டை : எதிரொட்சைட்டுகளையும் விட்டமின் E களையும் கொண்டுள்ளது. இது மூளை வயதாக்கத்தை குறைக்கும்.
- கசப்பு சொக்லட் : அறிவு சார்பாக தேவையான பிலேவநோய்ட்களை, வழங்கும்
- நீர் : மூளையானது 80 % நீரால் ஆனது என்பதால்,எவ்வளவு நீர் குடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது.
வாசிப்புக்கான சக்தியை கட்டவிழுங்கள்
(முறை)
கற்பதற்கு நீங்கள் வாசிக்க வேண்டுமென்கிறார். தினமும் 10 நிமிட வாசிப்பு, ஆரம்பிக்க சிறந்த முறை.
(உங்களுக்கு நல்ல துணையுள்ளது. பில்லியனர் பில் கேட்ஸ் வருடாந்தம் 50 புத்தகங்களை வாசிக்கிறார். அதே வேளையில் அவரது நண்பர் பில்லியனர் Warren Buffett குறைந்தது ஒரு நாளைக்கு 500 பக்கங்கள் செய்தியாவது வாசிக்கிறார்.)
வாசிப்புக்கென தனி சக்தி உள்ளது. அதன் திறமை காலத்தோடு வெளிப்படும். இங்கு சாவியே தொடர்ச்சியாக செய்வதுதான்.
நீங்கள் எப்பொழுதும் வாசிக்க விரும்பிய ஒரு புத்தகத்தை வாசியுங்கள். எந்தவொரு திசை திருப்பும் காரணியையும் அனுமதிக்க வேண்டாம். நேரம் வைத்து வாசியுங்கள். உங்கள் விரலாலோ அல்லது புத்தகக் குறிப்பானாலோ தொடர்ச்சியாக வாசிப்பதை தொடருங்கள்.
தினமும் வாசிப்பதை உறுதி செய்ய கலண்டரில் குறியுங்கள். உங்கள் தந்திரங்கள் செயற்படுவதை இதுவே உறுதி செய்யும்.
வாசிப்பது மூளைக்கு சிறந்த பயிற்சி. நினைவிருக்கட்டும். தசாப்தங்களை கடந்த அனுபவங்களை நீங்கள் ஒரு புத்தக வாசிப்பால் பெறலாம்.
இதனைப் போன்ற உடற் சுகாதார தகவல்களுக்கு
Image Source : https://www.sciencenews.org/article/idea-brain-book-explores-evolution-neuroscience