இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
தமிழர்களின் சடங்குகள்
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளை தாண்டி வருகின்றனர். அவரவர்களின் சமயம் மற்றும் சந்தர்ப்பங்களுக்கு தகுந்தாற்போல் பல்வேறான சடங்குகளை தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
மனிதர்களின் வாழ்வோடு சம்பந்தமான குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்துதல், திருமணம் போன்றவை நடத்துகிறோம். மனிதர்களின் தேவைகள் அடிப்படையில் வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கும் பல சடங்குகளை நாம் செய்து வருகிறோம். இந்த சடங்குகளை மேற்கொள்வது நம் உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கும் விதமாகவும் அமைகிறது.
அந்தவகையில் குழந்தைகளுக்கு தேனை தொட்டு வைத்தல் எவ்வாறு? என்பதை பற்றி பார்க்கலாம்.
தேனை தொட்டு வைத்தல்
குழந்தை பிறந்தவுடன் தேனை தொட்டு வைத்தல் தமிழர்களின் சடங்குகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தேனை தொட்டு வைத்தல் என்பது பிறந்த குழந்தையின் நாவில் இனிப்பு சுவையுடைய நீர்மத்தை வைக்கும் ஓர் சடங்காகும்.
தேனை வைக்க தேன் அல்லது இனிப்பு சுவை கொண்ட தண்ணீரை வைக்கின்றோம்.
தங்க மோதிரம் போன்றவற்றை சிலமுறை தேய்த்து அதில் தேன் கலந்து தருவதும் உண்டு. பசு நெய், தேன் ஆகியவற்றை கலந்து தங்கம் அல்லது வெள்ளி கிண்ணத்தில் வைத்து ஒரு தங்கத்துண்டினை (மோதிரம் போன்றவற்றை) அழுத்தி உரைத்து குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.
இதை அக்குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ கல்வி, வீரம், செல்வம், நற்பண்பு என்று ஏதாவது ஒன்றிலாவது சிறந்தவர்களைக் கொண்டு அவர்களின் வலது கை ஆள்காட்டி விரலால் தேனை தொட்டு குழந்தையின் நாக்கில் வைக்கச் சொல்லுவார்கள். இதைக் கோழி இறகைக் கொண்டும், பேனாவின் எழுது முனையைக் கொண்டும் தொட்டு வைக்கலாம்.
தேனை தொட்டு வைக்க காரணம் என்ன?
தேனை என்ற சொல்லிற்கு புத்தி என்பது அர்த்தம். தேனை தொட்டு வைக்கும் பெரியவர்களின் நற்குணத்தினை அக்குழந்தையும் பெற்று சமூகத்தில் உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த சடங்கினை நாம் செய்கிறோம்.
யார் இந்த சடங்கினை செய்யலாம்?
இந்த சடங்கினை அந்த குழந்தையின் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். சில சமயங்களில் அவர்களின் வாழ்க்கை முறையை வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
குழந்தைகளின் தாய்மாமாவிற்கே இதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்பின் அதிகப்படியான இன்பங்களை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் குழந்தைகளுக்கு தேனை தொட்டு வைத்தால் மிகவும் நல்லது.