அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம். பதினைந்தாவது கதை, ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து இதோ,
ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து
பெரும் ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.
அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு குரு அவனிடம்,”நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு” என்று சொன்னார்.அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.
“சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு” என்றார்.அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.
“வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு” என்று கேட்டார். அதற்கும் அவன் முடியாது என்றான்.
உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார். அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.
அதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,
“உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும்
இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு” என்று கூறினார்.
கருத்து :
விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே
கதைகள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்