Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

பித்ரு தோஷம் என்றால் என்ன ? அது எதனால் வருகிறது?

  • March 12, 2021
  • 49 views
Total
3
Shares
3
0
0

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.

ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

பித்ரு தோஷம் என்றால் என்ன ? அது எதனால் வருகிறது?
image source

ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

பித்துருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்துருக்களே ஆவர்.

பித்ரு
image source

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்துருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்துருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்துருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.

பித்ரு தோஷம் நிவர்த்தி பூஜை

இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

பித்ரு தோஷம் என்றால் என்ன ? அது எதனால் வருகிறது?
image source

ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை – பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்துரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால் தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்துரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்துருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.

பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்

  1. பிதா – தகப்பனார்
  2. பிதாமஹர் – பாட்டனார்
  3. ப்ரபிதாமஹர் – பாட்டனாருக்கு தகப்பனார்
  4. மாதா – தாயார்
  5. பிதாமஹி – பாட்டி
  6. ப்ரபிதாமஹி – பாட்டனாருக்கு தாயார்
  7. மாதாமஹர் – தாயாருக்குத் தகப்பனார்
  8. மாது: பிதாமஹர் – தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
  9. மாது: பிரபிதாமஹர் – தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
  10. மாதாமஹி – பாட்டி (தாயாருக்கு தாயார்)
  11. மாது : பிதாமஹி – தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
  12. மாது: ப்ரபிதாமஹி – தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி

மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.

பித்ரு தோஷம் வர காரணங்கள் என்ன?

பித்ரு தோஷம் என்றால் என்ன ? அது எதனால் வருகிறது?
image source

கருச் சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்ய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்கா விட்டால் வரும். துர்மாணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப் பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யா விடில் பித்ருதோஷம் வரும்.

எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்

தமிழ்க்கலாசாரம் பகுதிக்கு செல்க

பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

Facebook 3K Likes
Post Views: 49
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி சிவனின் அருளை பெற்றுதரும் நான்கு ஜாம பூஜைகள்..!

  • March 11, 2021
View Post
Next Article
கால் ஆஃப் டூட்டி : நவீன யுத்தத்திலிருந்து விடை பெறுவதற்கான நேரம் இது

கால் ஆஃப் டூட்டி : நவீன யுத்தத்திலிருந்து விடை பெறுவதற்கான நேரம் இது

  • March 12, 2021
View Post
You May Also Like
இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!
View Post

இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!
View Post

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் - 2021 ராசி வரவு - செலவு பலன்
View Post

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது
View Post

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை
View Post

ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விரதம்!!

பிலவ வருடம் - நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்
View Post

பிலவ வருடம் – நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்

மாவிலை
View Post

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

சாம்பிராணி
View Post

இந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.