உடல் எடை குறைய, உடலை மெருகேற்ற, சருமம் பளபளக்க என பல
காரணங்களை சொல்லி க்றீன் டீ குடிப்பது இன்று வாடிக்கையாகிவிட்டது.
அப்படி க்றீன் டீ குடிப்பதால் உண்மையாகவே உடல் எடை குறைகிறதா, உடல் மெருகேறுகிறதா அல்லது அழகு கூடி விடுகிறதா என்றால் யாரிடமும் சரியான பதில் இல்லை.
ஏனென்றால் தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு அல்லது
தவறான வழிகாட்டுதலின் பேரிலே க்றீன் டீ அருந்துபவர்கள்தான் அதிகம். அதன் பயன் அறிந்து க்றீன் டீ அருந்துபவர்கள் மிக குறைவு.
நிஜத்தில்க்றீன் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
க்றீன் டீ என்றால் என்ன?
உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை போக்கக் கூடியது க்றீன் டீ. முக்கியமாக இது தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற இது மிகவும் உதவுகிறது. க்றீன் டீ அருந்தும்போது
கெட்ட கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும்.இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
க்றீன் டீ யாருக்கு நல்லது?
உடல் பருமன் மிக அதிகமாக உள்ளவர்கள் அல்லது தனது சரியான உடல் எடையில் அளவிலிருந்து 20 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் க்றீன் டீயைத் தொடர்ந்து அருந்தலாம்.
யாரெல்லாம் க்றீன் டீ அருந்தக் கூடாது?
உடல் எடை குறையவும்,கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் இது எந்த
அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
அதாவது உடலில் இருந்து விற்றமின்கள் மற்றும் மினரல்களை
மொத்தமாக வெளியேற்றிவிடும்.
உடலில் கல்சியம் போன்ற சத்துகள் உறிஞ்சப்பட்டு எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கும். எனவேஅதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற வரைமுறை உண்டு.
அதேபோல் நீரிழிவுடன் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உட்பட அனைவருமே மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே க்றீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஒஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்பு பலவீனத்தை
உண்டாக்குவதில் க்றீன் டீ க்கு முக்கிய பங்கு இருக்கிறது.
எனவே. க்றீன் டீயை ஒரு நவநாகரிக விடயமாக நினைத்து எல்லோரும் பருகக் கூடாது.
க்றீன் டீ எடுக்கக் கொள்ளும் முறை
அதிகளவு உடல் பருமன் உள்ளவர்கள் ஒவ்வொரு வேளை உணவிற்குப்
பிறகும் க்ரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். இது நாம் உண்ட உணவின் மூலம் சேர்ந்த தேவையற்ற கொழுப்புகளை உடனே கரைக்கும் தன்மையுடையது.