இப்போது apple நிறுவனத்தின் புதிய மேக்புக்ஸ்கள் (MacBooks) மற்றும் புதிய மேக்மினிஸைப்( MacMinis)பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள்.இதற்கு காரணம் ஆப்பிளின் சமீபத்திய M1 chip ஆகும்.
இந்த புதிய apple devices களின் செயல்திறனும் (performance ) பலரது கவனத்தை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது இந்த புதிய apple M1 devices அனைத்தும் 2020 ஆம் ஆண்டிலேயே சந்தைக்கு வந்ததுவிட்டது.
ஆனால் இப்போதும் கூட இந்த புதிய apple M1 சாதனங்களுக்கு apple பயனர்களிடமிருந்து( users) நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. எனவே 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த M1 chip உடன் மூன்று சாதனங்களை மட்டுமே நம்மால் கவனத்திற்கொள்ள முடிந்தது, அது MacBook Air, MacBook Pro மற்றும் Mac Mini ஆகிய devicesகள் ஆகும்.
எனவே 2021க்கு Macs எதுவும் வரப்போவதில்லை என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், இப்போது புதிய Mac Books இன் பல Leaksகள் இணையத்தில் உலா வருவதை நம்மால் காண முடிகின்றது.இந்த Leaks புகைப்படங்களின் மூலம் நம்மால் 2021ல் இருந்து நிறைய பெரிய வடிவமைப்பு மாற்றங்களை(design changes) எதிர்பார்க்கலாம். எனவே முதலில் MacBooks பற்றி பேசலாம், இந்த Leaks களின்படி இந்த ஆண்டு வரவிருக்கும் MacBooksல் MacBook Air ஐ கவனித்துக் கொள்ள முடியாது. இதற்கு காரணம் கடந்த ஆண்டே MacBook Air மறுவடிவமைப்பு(redesign ) செய்யப்பட்டதால் ஆகும்.
ஆனால் இந்த புதிதாக வரவிருக்கும் MacBook Prosகளின் அளவு சற்று மாறுபட்டுள்ளது.இப் புதிய மேக்புக் ப்ரோஸ்(MacBook Pros) 14 மற்றும் 16 அங்குல அளவுகளிலேயே காணப்படும்.அதுமட்டுமில்லாது இந்த மேக்புக்கிலிருந்து குறைந்த அளவு உளிச்சாயுமோரமமே (less amount of bezel) எதிர்பார்க்கலாம்.
எனவே இந்த கசிவுகளின்படி(Leaks), இந்த மேக்புக்ஸிலிருந்து அவர்களின் முந்தைய மாக்ஸேஃப் தொழில்நுட்பத்தையே(Magsafe Technology) நம்மால் சிலநேரம் எதிர்பார்க்கலாம்.
அதோடு இந்த கசிவுகளின் படி அவற்றின் தற்போதைய டச் பார்(Touch Bar) அகற்றப்படும் என்றும் கூறப்படுகின்றன.இந்த மேக்புக்ஸிலிருந்து அடுத்த தலைமுறைகான next generation displayயும் எதிர்பார்க்கலாம்.ஆனால் இவர்களின் அடுத்த தலைமுறை மேக்புக்ஸ்கள் எப்போது வெளிவரும் என இவர்கள் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை,ஆனாலும் இணையத்தின்படி இது இந்த ஆண்டின் நடுவிலேயே வரும் என எதிர்பார்க்கிறோம்.
இது போன்ற வேறுபட்ட தொழில்நுட்ப தகவல்களுக்கு தொழில்நுட்பம் பகுதியைப் பார்வையிடுங்கள்.