ஆபிரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பிரதேசங்களில் புவியின் காந்தப்புலம் வீழ்ச்ச்சியடைவதால் செயற்கைக் கோள் மற்றும் விண் ஓடங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன.
விஞ்ஞானிகள் இந்த சம்பவத்தை தென் அட்லாண்டிக் ஒழுங்கீனம் என குறிப்பிட்டு அவதானித்து வந்திருக்கிறார்கள். ஆனால் காரணம் இன்னும் தெரியவில்லை
புவியின் காந்தப்புலம் வீழ்ச்சி அறிக்கைகள்
ஐரோப்பிய விண்வெளி செயலாண்மை செயற்கை கோள்களில் இருந்து சேகரித்த தகவல்கள் படி, காந்தப்புலமானது 1970 – 2020 காலப்பகுதியில் 8 வீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஜேர்மன் புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த Jürgen Matzka கருத்துப்படி, இது ஒரு தசாப்தத்துக்கு முன்னரே தோன்றியதகாவும், அண்மைக்காலங்களில் அதிக வேகமாக நடைபெறுவதாகவும் கூறுகின்றார்.
நாம் விண்வெளியில் செயற்கைக்கோள் திரளைக் கொண்டிருருப்பதால் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அவை நமக்கு இந்த ஒழுங்கீனத்தை அறிய நன்கு உதவுகின்றன. சவால் என்னவெனில் புவியின் உட்பகுதியில் ஏற்படுத்தபோகும் மாற்றங்களை ஆய்வதுதான்.
ESA கருத்துப்படி, இந்த குறைவுத்தன்மை புவியின் காந்தப்புலத்தினை திசைமாற்ற வாய்ப்புண்டு. அதாவது வட, தென் துருவங்களையும் இடம்மாற்ற வாய்ப்புண்டு.
கடைசியாக புவிவியல்காந்த மாற்றம் இடம்பெற்றது 780,000 வருடங்கள் முன்பு என்கிறார்கள். அடுத்தது நடைபெறாமல் தாமதப்படுகிறது. வழக்கமாக இவ்வாறான நிகழ்வு 250,000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
காந்தப்புலமானது,நம் புவியின் சூரியக் காற்றிலிருந்தும், பாதகமான அண்ட கதிர்ப்புகளிளிருந்தும் நம்மைக் காப்பதால், இவ்வாறான நிகழ்வொன்றின் விளைவுகள் தனித்துவமானவையாக இருக்கும்.
அதைத்தவிர, தொலைத்தொடர்பு சாதனங்களும், செயற்கை கோள்களும் கூட இதில் தங்கியுள்ளன. இதனால் செல்லிடத்தொலைபேசிகளும் கணினிகளும் சிக்கலை எதிர் நோக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் துருவத்தின் ஒழுங்கீனமானது, ஏற்கனவே செயற்கைக் கோள்களுக்கு சிக்கல்களைக் கொடுத்துள்ளதோடு , ESA எச்சரித்தபடி, விண்வாகனங்களுக்கு இது தொழிநுட்பக் கோளாறையும் ஏற்படுத்தலாம்.
Proceedings of the National Academy of Sciences எனப்படும் விஞ்ஞானப் பத்திரிகையின், ஆய்வுப்படி இந்தக் குறைவானது காந்தப்புலத்தை எதிர் திசையில் திருப்புவதல்ல எனக் குறிப்பிடுகிறது.
மேலும் அவ்வாய்வு இது உடனடியானதல்ல எனவும், முழுமையட பத்தாயிரம் ஆண்டுகளாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ESA கருத்துப்படி, தனது திரள் செயற்கைக் கோள்கள் மூலமாக இந்த காந்தப்புல வீழ்ச்சியை தொடர்ச்சியாக கண்காணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
“இந்த ஒழுங்கீனத்தின் ஆரம்பம் தொடர்பான எந்த காரணங்களும் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறாயினும் ஒரு விடயம் உறுதியாகும் : திரள் செயற்கைக் கோள்கள் மூலமாக புவியின் உட்பகுதி பற்றி அரிதாக அறியப்பட்ட புதிய நுணுக்கமான அறிவு கிடைக்கப்பெற்றுள்ளது“ எனவும் கூறுகின்றது அந்நிறுவனம்.
மேலும் விஞ்ஞானத் தகவல்கள் அறிய வேண்டுமா ? இதோ தானாகவே சுத்திகரிக்கும் நீர்ப்போத்தல் பற்றி அறியுங்கள்
Image Source : https://www.esa.int/Applications/Observing_the_Earth/Swarm/Swarm_probes_weakening_of_Earth_s_magnetic_field