இந்த ஆக்டொபர் மாதம் வெளிநாடுகளில் ஹாலோவீன் மாதமாகும். அதனை குறிவைத்து பல திகில் படங்கள் வெளிவருகின்றன.
இதற்கு மேல் என்ன என்றஅளவுக்கு 2020 நம் எல்லோரையும் வறுத்து எடுத்து விட்டது. ஜனவரி மாதம் முதலே இதை விட வருஷம் மோசமாகாது என்று சொல்லும் நபர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். பல துறைகளும் பாதிக்கப்பட்டதை போல சினிமாவும் வடிவம் மாறி விட்டது. வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருப்பவர்களுக்கு ஏதேனும் பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் 2020 இல் வெளியான சிறந்த திகில் படங்களின் பட்டியல் இதோ :
2020ல் வெளியிடப்படும் 5 சிறந்த திகில் திரைப்படங்கள்
த விட்ச்ஸ் – the witches
பட நீளம் : –
பிரிவு : அட்வென்ச்சர் , நகைச்சுவை, குடும்பம்
ரோல்ட் டால் 1983 ஆம் ஆண்டின் மரபுப் புத்தகமான ‘தி விட்ச்ஸ்’ ஐ அடிப்படையாகக் கொண்டு, கதை நிஜ வாழ்க்கையில் மந்திரவாதிகளை சந்திக்கும் ஏழு வயது சிறுவனின் பயங்கரமான, வேடிக்கையான மற்றும் கற்பனையான கதையைச் சொல்கிறது. இதன் முன்னைய பாகம் 1990 இல் வந்தது. சூனியக்காரர்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஒரு சிறுவன் தான் எலியாக மாற சபிக்கப்பட்ட பிறகும் சூனியக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதைப் பற்றிய படமாக இது வெளிவந்தது.
இயக்குனர்: ராபர்ட் ஜெமெக்கிஸ்
நட்சத்திரங்கள்: அன்னே ஹாத்வே, ஆக்டேவியா ஸ்பென்சர், ஸ்டான்லி டூசி, கிறிஸ் ராக்
தி வுல்ப் ஒப் ஸ்னோ ஹொலோ – The Wolf of Snow Hollow
பட நீளம் : 83 நிமிடம்
பிரிவு : நகைச்சுவை, திகில், திரில்லர்
ஒவ்வொரு பௌர்ணமிக்குப் பிறகும் உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதால் ஒரு சிறிய மலை நகரத்தை பயம் பீடிக்கிறது. தூக்கத்தை இழப்பது, ஒரு கட்டிளமைப்பருவ மகளை வளர்ப்பது, மற்றும் நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை கவனித்துக்கொள்வது, போன்ற கஷ்டங்களுடன் அதிகாரி மார்ஷல் வார்வ்உல்ப் என்ற விலங்கு இல்லை என நிரூபிக்கப் போராடுகிறார்.
இயக்குனர்: ஜிம் கம்மிங்ஸ்
நட்சத்திரங்கள்: ஜிம் கம்மிங்ஸ், ரிக்கி லிண்ட்ஹோம், ராபர்ட் ஃபார்ஸ்டர், சோலி ஈஸ்ட்
தி இன்விசிபிள் மேன் – The Invisible Man
பட நீளம் : 124 நிமிடம்
பிரிவு : திகில், மர்மம், அறிவியல் புனைகதை
சிசிலியாவின் முறைகேடான முன்னாள் காதலர் தனது செல்வத்தை அவளுக்காக விட்டு விட்டு , தற்கொலை செய்துகொண்டபோது அவனது மரணம் ஒரு ஏமாற்று வேலை என்று அவள் சந்தேகிக்கிறாள். தொடர்ச்சியான தற்செயல் நிகழ்வுகள் ஆபத்தானதாக மாறுவதால், சிசிலியா, தன்னை யாரும் பார்க்க முடியாத ஒருவர் தாக்க முயற்சிக்கிறார் என்பதை நிரூபிக்க போராடுகிறதை காட்டும் பாடம்.
இயக்குனர்: லே வன்னெல்
நட்சத்திரங்கள்: எலிசபெத் மோஸ், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், ஹாரியட் டயர், ஆல்டிஸ் ஹாட்ஜ்
நோர்க்டன் – Nocturne (இரவு) (II)
பட நீளம் : 90 நிமிடம்
திகில், மர்மம், திரில்லர்
நம்பமுடியாதளவு திறமையான பியானோ கலைஞர்,மரபுவழி இசைக்கலைஞர்களுக்கான மதிப்புமிக்க நிறுவனத்தில் தனது மூத்த சகோதரியை முந்த தேர்ந்தெடுக்கும் பயங்கரமான வழி பற்றிய படம்.
இயக்குனர்: ஜூ குயர்கே
நட்சத்திரங்கள்: சிட்னி ஸ்வீனி, மேடிசன் இஸ்மேன், ஜாக் கொலிமோன், இவான் ஷா
ப்ளாக் பொக்ஸ் (II) – BlackBox (II)
பட நீளம் : 100 நிமிடம்
பிரிவு : திகில், மர்மம், அறிவியல் புனைகதை
ஒரு கார் விபத்தில் மனைவியையும் தனது நினைவையும் இழந்த பிறகு,தனிமைக்குளாகும் தந்தை ஒரு வேதனையான பரிசோதனை சிகிச்சைக்கு உட்படுகிறார். இதனால் அவர் உண்மையில் யார் என்று அவருக்கே சந்தேகம் எழுகிறது.
இயக்குனர்: இம்மானுவேல் ஓசி-குஃபர்
நட்சத்திரங்கள்: மமவுடோ ஆத்தி, பிலிசியா ரஷாத், அமண்டா கிறிஸ்டின், டோசின் மோரோஹுன்போலா
இந்தப் பட்டியல் உங்களுடைய சுவையை சேர்ந்ததா ? இதோ மிகவும் வித்தியாசமான டாப் 10 பட்டியல்கள் உங்களுக்காக
பேஸ்புக் பக்கத்தில் எம்மைத் தொடரவும்
முகப்பு பட உதவி : IMDB