பூமியில் பிளாஸ்டிக் அளவைக் குறைக்க உதவும் ‘பிளாஸ்டிக் உண்ணிகள்’.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, பிளாஸ்டிக் உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக உலகளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் மாசடைதல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக, நாங்கள் பிளாஸ்டிக்குகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம் , ஆனால் ஏற்கனவே சுற்றுச்சூழலில் வீசப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக்குகளை நாம் என்ன செய்ய போகிறோம்?
தேன் மெழுகினை உணவாக உட்கொள்ளும் மெழுகுப்புழுவானது இப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் .
மெழுகுப்புழு என்பது மெழுகு அந்துப்பூச்சிகளளின் கூட்டுப்புழு நிலையாகும். அதாவது வண்ணத்துப்பூச்சிக்கு மயிர்க்கொட்டி போல.
மெழுகு அந்துப்பூச்சிகள் தேன்கூட்டின் தேன் மெழுகில் முட்டையிடுகின்றன. அம்முட்டைகள் பின் குடம்பியாகி பின் கூட்டுப்புழு(மெழுகுப்புழு) ஆகின்றன. இந்த மெழுகுப்புழுக்கள் தேன் மெழுகை துளைத்து அதனை உணவாக உட்கொண்டவாறு வெளியேறுகின்றன.
மெழுகுப்புழுக்களின் இயற்கையான உணவான தேன் மெழுகும் ஷாப்பிங் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூல கூற்று கட்டமைப்பை கொண்டவை .
மெழுகுப்புழுக்களின் குடலில் உள்ள பாக்டீரியாகளினால் பிளாஸ்டிக் சிதைவடைந்து அவற்றின் உணவாகவும் glycol எனப்படும் உக்க கூடிய பக்க விளைபொருளாகவும் பிரிகை அடைகின்றன. இங்கு வெளியேற்றப்படும் glycol இன் அளவை சில ஆண்டிபயாடிக் செயன்முறைகளின் மூலம் குறைக்க முடியும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ‘பிளாஸ்டிக் உண்ணிகள்‘ ஆனவை பிளாஸ்டிக் கழிவுகளை உக்க வைப்பதற்கன ஆய்வுகளில் பெருமளவில் பங்களிக்க கூடும்.மேலும் எதிர் காலத்தில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக்குகளின் அளவினை குறைப்பதில் இவை பெரும்பங்காற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தொட்டுணரக்கூடிய மெய்நிகர் உண்மை பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ள விரும்பின் click-here