Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

தர்ப்பணம் செய்ய தை நாளை (பிப் 11) அமாவாசை சிறந்த நாள்!!

  • February 10, 2021
  • 45 views
Total
3
Shares
3
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தை மாதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது தை அமாவாசை. வான் மண்டத்தில் இருக்கும் சூரியன் ஜோதிட கணக்கின் படி மகரத்தில் உச்சம் பெரும் மாதம் இந்த தை மாதம். அதனால் இந்த மாதத்தில் வரும் அமாவாசை தர்ப்பணம் செய்வதற்காக மிகவும் சிறப்பு பெற்றது.

தை அமாவாசை தர்ப்பணம் என்றால் என்ன ?

தர்ப்பணம்
image source

அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு நம் நன்றியை செலுத்த உகந்த நாட்கள் என கருதப்படும் மூன்று முக்கிய நாட்களில் (மகாளய, தை மற்றும் ஆடி) தை அமாவாசை ஒன்றாகும்.

தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பனம் கொடுத்தால், ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

அதன்படி இந்த ஆண்டு தை 29ம் தேதி அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி தை அமாவாசை தினமாகும். அந்நாளில் தர்ப்பனம் கொடுப்பது எப்படி? தர்ப்பணம் கொடுக்கும்போது செய்யக்கூடாதவை என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் எவ்வாறு கொடுப்பது?

நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அதுவும் காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதேபோல் மதிய வேளை தர்ப்பனம் செய்ய மிகவும் உகந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பனம் கொடுக்கலாம்.

ஆனால் ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது.

தர்ப்பனம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

தர்ப்பணம் செய்ய தை நாளை (பிப் 11) அமாவாசை சிறந்த நாள்!!
image source

இந்த தவறை செய்து விடாதீர்கள்…!

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தர்ப்பனம் கொடுக்கும்போது எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

மேலும் தர்ப்பனம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.

அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பனம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பனம் கொடுக்க வேண்டும்.

காகத்துக்கு முக்கியத்துவம் :

தர்ப்பணம் செய்ய தை நாளை (பிப் 11) அமாவாசை சிறந்த நாள்!!
image source

தை அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.

காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

துளசி மாலை :

தர்ப்பணம் செய்ய தை நாளை (பிப் 11) அமாவாசை சிறந்த நாள்!!
image source

முன்னோர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம்.

எனவே தை அமாவாசையன்று வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். நமக்கு விஷ்ணு மற்றும் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்…

மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வம் ஐயனார்

Post Views: 45
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஸ்னாப் சாட்டில் உங்கள் நண்பர்கள் யாரென்பதை உறுதிப்படுத்துங்கள்

ஸ்னாப் சாட்டில் உங்கள் நண்பர்கள் யாரென்பதை உறுதிப்படுத்துங்கள்

  • February 10, 2021
View Post
Next Article
தை அமாவாசை

தை அமாவாசை வழிபாடு…!

  • February 11, 2021
View Post
You May Also Like
இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!
View Post

இந்தியாவின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம்!!

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!
View Post

தமிழ் புத்தாண்டை வரவேற்போம்..!

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் - 2021 ராசி வரவு - செலவு பலன்
View Post

பிலவ புதுவருடப்பிறப்பு வாழ்த்துக்கள் – 2021 ராசி வரவு – செலவு பலன்

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது
View Post

இன்று யுகாதி புத்தாண்டு 2021 தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் கொண்டாடப்படுகிறது

ஞாயிற்றுக்கிழமை
View Post

ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விரதம்!!

பிலவ வருடம் - நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்
View Post

பிலவ வருடம் – நேரம், மருத்து நீர் , வண்ணம், கைவிசேடம் மற்றும் தோஷம்

மாவிலை
View Post

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

சாம்பிராணி
View Post

இந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.