சிலந்திகளுக்கு அதிக அளவு விஷம் இருக்கிறது..
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள். நம் எல்லோர் வீட்டு மூலைகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் சிலந்திகள் இருக்கும் நாம் அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம்.
உலகத்தில் 40 ஆயிரம் வகையான சிலந்திகள் உள்ளது அதில் சில சிலந்திகளுக்கு பாம்பை விட அதிகமான அளவு விஷம் இருக்கிறது. அதிலும் பெரிய சிலந்திகளை விட சின்ன சிலந்திகள் தான் மிகவும் ஆபத்தாக உள்ளது. இந்த சிறிய சிலந்திகள் கடித்தால் வெறும் 15 நிமிடத்திலேயே மனிதர்கள் இறந்து போய் விடுவார்கள் அந்த அளவுக்கு ஆபத்தான சிலந்திகளை நாம் இங்கு பார்ப்போம்.
Brazilian Wandering Spiders

இந்த சிலந்திகளை Banana Spider என்று சொல்லுவார்கள் காரணம் என்ன வென்றால் இந்த சிலந்தி அதிகமாக வாழை மரத்திலும் வாழைப்பழங்களிலும் ஒளிந்து இருக்கும். இதனால் வாழைப்பழம் சாப்பிடும் போது எப்பவுமே பார்த்து சாப்பிட வேண்டும். இதன் முன் கால்களை மட்டும் தூக்கிக் கொண்டு நிற்கும் எல்லாம் பூச்சிகளையும் வேட்டையாடிச் சாப்பிடும். இது கடித்த உடனே நமது நரம்புகள் பாதிக்கப்பட்டு உடம்பெல்லாம் அதிக வலி எடுக்கும் வாந்தியும் மயக்கமும் ஏற்ப டும்.
Black Widow Spider

இந்த சிலந்திகள் வெயில் பிரதேசங்கள் குளிர் பிரதேசங்களில் மற்றும் பாலைவன பிரதேசங்களில் வாழும். இதில் ஆண் சிலந்திகளை விட பெண் சிலந்திகள் பெரிதாக வளர்கிறது. அதிகபட்சமாக 1 1/2 அடி வரை வளர்கிறது. பாம்புகளுக்கு இருக்கிற விஷத்தை விட இரண்டு மடங்கு அதிகமா விஷம் இருக்கும். இது மிக சின்னதாக தான் கடிக்குமாம். இது கடித்த உடனே பயங்கரமான வலி ஏற்பட்டு பெரிய வீக்கமும் வாந்தி மூச்சுத்திணறல் ஏற்படும். இது சின்னதாக இருந்தாலும் குழந்தைகளும் வயதானவர்களும் இறந்து போய் விடுவார்கள். அந்த அளவுக்கு ஆபத்தான சிலந்தி இது. தேள் உடன் சண்டை போட்டு தேளை கொன்று விடுமாம். அதனால் இந்த சிலந்தியை பார்த்தால் அருகே மட்டும் போக வேண்டாம்.
Yellow Sac Spider

இந்த சிலந்தி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வளர்கிறது. இது அரை அடி தான் வளரும். இதில் Cytotoxin என்ற விஷம் உள்ளது இந்த சிலந்தி கடித்தால் பயங்கரமான தசைவலி மற்றும் வாந்தி ஏற்படும்.
Whistling Tarantula Spider

இந்த சிலந்திகள் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் வாழ்கிறது. இது கடித்தால் 30 நிமிடத்தில் ஒரு பெரிய நாய் கூட இறந்து போய் விடுமாம். அந்த அளவுக்கு இதில் அதிகமான விஷம் உள்ளது. இது மனிதர்களை கடித்தால் பயங்கரமான வலி ஏற்பட்டு ஆறு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரைக்கும் வாந்தி வந்து கொண்டே இருக்கும்.
Six Eyed Sand Spider

இந்த சிலந்திகள் பாலைவன பகுதிகளில் மட்டும் தான் வாழும். இது கடித்து ஒரு ஐந்து மணி நேரத்தில் ஒரு பெரிய முயலே இறந்து விடுமாம். இது கடித்து சில மனிதர்களுக்கு கையை வெட்டி எடுத்து உள்ளார்கள். கடித்த உடன் தாங்க முடியாத வலி ஏற்படும். மருத்துவமனைக்கு உடனடியாக சென்று இதற்கு மருந்து எடுத்து கொள்ள இல்லை என்றால் உடம்பு முழுவதும் விஷம் ஏறி அவர் இறந்து போக வாய்ப்பு உள்ளது.
The Chilean Recluse Spider

இந்த சிலந்தி மிகவும் ஆபத்தானது. இது பன்னிரெண்டு அடி வரை வளர கூடியது. இது கடிக்கும் இடத்தில் நாளுக்கு நாள் புண் பெரிதாக வந்து கொண்டு இருக்கும். இந்த சிலந்தி கடித்த உடன் மருந்து எடுத்தாலும் புண் ஆற ஒரு மாதம் ஆகும். இது கடித்து விஷம் நன்றாக ஏறினால் கை கால்களை எடுக்க நேரிடும்.
Northern Funnel Web Spider

இந்த சிலந்திகள் அதிகமாக மரத்தில் தான் வாழ்கின்றன. இது மூன்று அடி தான் வளரும். ஆனால் இது கடித்தால் மனிதர்கள் இறந்து விடுவார்கள். அந்த அளவுக்கு இதில் விஷம் அதிகம் உள்ளது. இது மிகவும் வேகமாக வேட்டையாடும் இதுக்கு தேளுக்கு உள்ளது போல் விஷம் உள்ள இரண்டு கொடுக்குகள் இருக்கிறது. இது அதிகம் தண்ணீர் உள்ள ஓரங்களில் தான் இருக்கும். நீச்சல் குளங்களில் குளிப்பவர்கள் கவனம்.
Sydney Funnel-Web Spider

சிலந்திகளில் அதிகமாக விஷம் உள்ள சிலந்தி என்று இதற்கு கின்னஸ் சாதனையும் உள்ளது. இது கடித்தால் மனிதர்கள் வெறும் பதினைந்து நிமிடங்களில் இறந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதில் ஆபத்தான Atracotoxin என்ற விஷம் உள்ளது இந்த விஷம் நம் உடம்பில் சென்ற உடன் நமது நரம்புகளை தாக்கி இரத்தத்தை உறைய வைத்து கொன்று விடும். பாம்புகள் கடித்தால் அதன் மொத்த விஷத்தையும் ஒரே கடியில் விஷத்தை செலுத்தாது. ஐந்துமுறை கடிக்கும் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சம் விஷத்தை செலுத்தும். சிலந்திகள் அப்படி அல்ல அதன் மொத்த விஷத்தையும் ஒரேடியாக செலுத்தி விடும். இந்த சிலந்திகள் பாம்புகளை விட பல மடங்கு ஆபத்தானது.
Hairy Mystery Spider

இந்த சிலந்திகள் மலை காடுகளில் தான் வாழ்கின்றன. இதிலும் மனிதனை கொல்லும் விஷம் இருக்கிறது. இது கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும். இந்த சிலந்தி கடித்து ஒரே நாளில் ஏழு பேர் இறந்து உள்ளார்கள். இது அதிகமாக இரவில் தான் வரும்.
Mouse Spider

இந்த சிலந்திகள் அதிகமாக ஆஸ்திரேலியாவில் தான் வாழ்கின்றன. இந்த சிலந்திகள் அதிகமாக எலிகளை தான் வேட்டையாடும். அதனால் தான் இதுக்கு Mouse Spider என்று சொல்கின்றனர். 20 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் வரை வளரும். இ ந்த சிலந்தி கடித்தால் பயங்கரமான வலியும் ஐந்து மணித்தியாலம் தொடர்ந்து வாந்தி வரும்.
சிலந்தி என்று சாதரணமாக நினைக்க வேண்டாம் வாசகர்களே முடிந்த அளவுக்கு வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்…