சூறாவளியிடம் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சில உதவி குறிப்புக்கள்
சூறாவளிக்கு முன்
- உங்கள் வீட்டை சுற்றியுள்ள மரங்களையும் கிளைகளையும் சீராக ஒழுங்கமைக்கவும்
- உங்கள் வீட்டின் சுவர்கள் கூரைகள் ஆகியவை பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்
- உங்கள் வீடுகளில் சீரற்ற தளர்வான இணைப்புகளுடன் உள்ள பொருட்களை வாங்கி வைக்கவும்
- உங்கள் முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பையில் வைக்கவும்
- அனைத்து மின் சாதனங்களையும் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கவும்
- மின்கலத்தினால் இயங்கும் வானொலியின் உதவியுடன் செய்திகளை கேட்கவும்
- வீட்டிற்கு உள்ளே பாதுகாப்பாக ஜன்னல்கள் இல்லாத வீட்டின் உள் அறை குளியலறை போன்ற இடங்களிலும் இருக்கவும்
- தளர்வான கூரை ஓடுகள் மற்றும் இடைவெளிகளை சரிபார்த்து பாதுகாக்கவும்
- கிரில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும்
- ஏணிகள், சைக்கிள்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இதர கருவிகள் போன்ற வீட்டை சுற்றி உள்ள தளர்வான பொருட்களை ஒதுக்கி வைக்கவும்
- அவசர நிலைமைக்கான பொதியை ( டார்ச், மருந்துகள் , மாஸ்க்,) தயார் நிலையில் வைக்கவும்
- வீட்டின் வலுவான பகுதி எங்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்பதை உறுதிப்படுத்தவும்
- சூறாவளி தொடர்பான எச்சரிக்கையை பக்கத்து வீட்டார்களுக்கும் அறியத் தரவும்.
- நீர் வழங்கல் தடைப்படும் சந்தர்ப்பம் இருப்பதால் நீர்த்தாங்கிகள் மற்றும் வாளிகளில் நீரை நிரப்பி வைக்கவும்.
- ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பாதுகாப்பாக மூடி வைக்கவும்.
சூறாவளியின் போது
- கட்டிடத்தின் கீழ் மாடியில் அல்லது சுவர்கள் வலுவூட்டப்பட்ட அறை போன்ற சிறந்த பாதுகாப்பான தங்கும் இடத்தில் இருக்கவும்
- ஜன்னல்கள் மற்றும் கண்ணாடி கதவுகளில் இருந்து தள்ளி இருக்கவும்
- விழிப்பூட்டல்களுக்கு உள்நாட்டு வானொலி செய்திகளை கேட்கவும்
- அனைத்து சாதனங்களையும் துண்டிக்கவும்
- கட்டிடம் உடைந்து போக ஆரம்பித்தால் போர்வை மெத்தை அல்லது மேசையின் கீழ் உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்
- நீங்கள் வெளியே இருந்தால் வீசும் காற்றில் இருந்து தூரமாய் போய் உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்
- நீங்கள் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் கடலுக்கும், மரங்களுக்கும் நீரோடைகளுக்கும் பின் கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே இருக்கவும்
- காற்றின் வேகம் குறைந்தால் சூறாவளி முடிந்து விட்டது என்று கருத வேண்டாம் விரைவில் மற்றொரு திசையிலிருந்து பலமான காற்று மீண்டும் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
- சூறாவளி எச்சரிக்கை முடிந்துவிட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்
சூறாவளிக்கு பிறகு
- பாதுகாப்பானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தும் வரை வெளியே செல்ல வேண்டாம்
- எரிவாயு கசிவு இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்கவும் ஈரமாக இருந்தால் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்
- அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு உள்ளூர் வானொலி செய்திகளை கேட்கவும்
- நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற நேருமாயின் அல்லது முன்னரே வெளியேறி இருப்பின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை மீள திரும்புவதை தவிர்க்கவும்
- பரிந்துரைக்கப்பட்ட பாதைகளை மட்டும் போக்குவரத்திற்கு பயன்படுத்தவும்.
- சேதமடைந்த மின் இணைப்புக்கள், பாலங்கள்,கட்டிடங்கள், மரங்கள் என்பன தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும்
- மற்றும் வெள்ள நீர் இருக்கும் இடத்திற்குச் செல்வதை தவிர்க்கவும்
- எல்லா எச்சரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவும் பார்வையிடுவதற்கு வெளியே செல்ல வேண்டாம் அதற்கு பதிலாக அண்டை வீட்டாருக்கு என்ன உதவிகள் தேவை என பார்க்கவும்
- தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும்
வழங்கியோர் : சமூக விழிப்புணர்வு செயற்திட்டம்
அனர்த்தத்திற்கான ஆயத்தமாதல் மற்றும் பதிலளித்தல் பிரிவு மருத்துவ பட்டப்படிப்பு நிறுவனத்தின் சுகாதாரத் துறைக்கான அனர்த்த முகாமைத்துவ பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறி 2020 அணி
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்