இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
பேன் மறைய என்ன செய்யலாம்?
விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் பேன் மறையும்
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறியதும் தண்ணீரில் தலைமுடியை அலசினால் பேன் போகும்.
படிகாரத்தை தூளாக்கி வெள்ளைத் துணியில் போட்டு சலித்து எடுத்து அதனுடன் தண்ணீர் கலந்து அக்கறைகளை தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் பேன்கள் மறையும்.
சீதாப் பழத்தின் கொட்டையை கொஞ்சம் எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் பொடியை போட்டு ஒரு வாரம் தடவிவந்தால் பேன் ஈறு எல்லாம் முற்றிலும் ஒழிந்துவிடும்.
தேங்காய் எண்ணையுடன் சமஅளவு வேப்ணெண்ணெயை கலந்து நன்றாக மண்டையோட்டில் படும்படி அழுத்தித் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு சற்று சூடான நீரில் சீகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். உடனே பேன்கள் அத்தனையும் உதிர்ந்துவிடும்.
பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
20 கிராம் வேப்பம் பூவையும் 10 கிராம் வெல்லத்தையும் 200 கிராம் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால் பொடுகு நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து தேய்த்தால் பொடுகு நீங்கும்.
பொடுகு நீங்க எலுமிச்சை சாறில் சிறிது உப்பை கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் வரை ஊறிய பின்னர் நன்கு அலசினால் பொடுகு மறையும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
-படித்தேன் பகிர்ந்தேன்-
image source:https://licecaresolutions.com/nits-vs-dandruff-how-to-tell-the-difference/