சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!
நவகிரக சனிபகவான் ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை அனைவரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவரே. அதேபோல் கஷ்ட நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள். சனியின் வேறு பெயர்கள் :கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், சௌரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய், முகன். பரிகாரங்கள் :தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.…
Share