சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடலுக்கு வெளிநாட்டினர் பாடி அழகாக நடனமாடிய அசத்தல் வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் ’சிவாஜி’. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ரஜினியின் அறிமுக பாடலான ’பல்லேலக்கா’ என்ற பாடலை வெளிநாட்டினர் சிலர் அச்சு அசலாக பாடி அதற்கேற்ற நடன அசைவையும் கொடுத்துள்ளனர். இது குறித்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.