Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
அறுபதாம் கல்யாணம்

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா உங்களுக்கு?

  • September 21, 2021
  • 198 views
Total
1
Shares
1
0
0
Shashti Poorthi – Celebration of the Diamond birthday anniversary! | A  Writer's Notebook.
image source

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

அறுபதாம் கல்யாணம்

கல்யாணம் என்பது நம் இல்லத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் நம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி மகிழும் தருணம்.

ஆனால், அதில் இருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.

தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை அறுபதாம் கல்யாணம் மணிவிழா, சஷ்டியப்த பூர்த்தி என்றெல்லாம் சொல்வார்கள்.

அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் யாருக்கும் ஏதேனும் தெரிந்தோ, தெரியாமலோ தீங்கு செய்திருந்தால், அதற்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக அறுபதாம் கல்யாணம் அமைகின்றது.

ஏன் செய்ய வேண்டும்?

குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61-ஆம் வயதில் அந்த ஆண் ‘சஷ்டியப்த பூர்த்தி” செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.

வயதான தங்கள் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்த பூர்த்தி சடங்கை செய்கின்றனர்.

எப்படி செய்ய வேண்டும்?

சஷ்டியப்த பூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும்.

இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைக்க வேண்டும்.

வேதியரின் அறிவுறுத்தலின் படி, குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும்.

பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்த பூர்த்தி சடங்கை நிறைவு செய்வார்.

பூஜை முடிந்ததும், கலசங்களில் பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது.

Thirukadaiyur, Shastipoorthi, Shatiapthapoorthi, Thirukadaiyur60thmarriage,  Sadhabishegam, Thirukadaiyurpooja, Manivizha, Kanagabishegam
image source

இத்திருமண நிகழ்வைக் காண்பது என்பது சொர்க்கத்தை காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண வைபவத்தில் தவறாமல் கலந்துகொள்வார்கள்.

பலன்கள்

நமது பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன.

மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும் தருகிறது.

புதுமனை புகுவிழா எப்படி கொண்டாட வேண்டும்

wall image

Post Views: 198
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பெங்களூர்

பெங்களூர் அணிக்கு பலம் சேர்க்கும் இலங்கை வீரர்கள்..!

  • September 20, 2021
View Post
Next Article
அனபெல்

அனபெல் சேதுபதி திரை விமர்சனம்..!

  • September 21, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.