எந்திரன்,2.0, படங்களின் மூலம் உலக வெகுஜன சினிமா அரங்கில் சென்றடைந்தவர் இயக்குனர் ஷங்கர்.
அவர் தன்னுடைய மகள் அதிதியை கதாநாயகியாக நடிக்க அனுமதித்திருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அவருடைய தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஆறு மாதம் நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு வந்திருக்கிறார்.
கார்த்தியை வைத்து கொம்பன் என்கிற படத்தை இயக்கி வெற்றி கொடுத்த முத்தையா இயக்கும் படம் தான் இந்த விருமன்.
தனது படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரத் தவறாத முத்தையா அதிதிக்கு நிச்சயமாகச் சத்தான கதாபாத்திரம் கொடுத்திருப்பார்.