ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் தனக்காக பின்னணி பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.
ஆனால் மற்ற நடிகர்களுக்காக விஜய் பின்னணி பாடியதில்லை. விஜய் போலவே தனுஷும் தான் நடிக்கும் படங்களில் சில பாடல்களை தானே எழுதி பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தில் அவருக்காக ஒரு பாடலை எழுதி பின்னணி பாடப் போகிறேன் அதோடு விஜய்யின் குரலுக்கேற்ப என் குரலை மாற்றி பாடவும் முயற்சி எடுக்க போகிறேன்.
இந்த படத்தில் விஜய்க்கு பாடல் எழுதி பாடுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது என்கிறார் தனுஷ்.